என்ன பெரிய தங்கம்..? தங்கத்தை விட 17 மடங்கு லாபத்தைக் கொடுத்த ரிலையன்ஸ் கதை தெரியுமா உங்களுக்கு..!

முதலீட்டு சந்தையிலும், முதலீட்டாளர்கள் மத்தியில் எப்போதும் பங்குச்சந்தை Vs தங்கம்.. முதலீடு செய்வதில் எது பெஸ்ட் என்ற விவாதம் காலம் காலமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் திருபாய் அம்பானி தலைமையில் வெளியான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் 1977 ஐபிஓ-வில் 1000 ரூபாய் முதலீடு செய்வதும், அதேநாளில் 1000 ரூபாய்க்குத் தங்கம் வாங்கியிருந்தால் எதில் அதிக லாபம் கிடைத்திருக்கும் என்பது குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது.

என்ன பெரிய தங்கம்..? தங்கத்தை விட 17 மடங்கு லாபத்தைக் கொடுத்த ரிலையன்ஸ் கதை தெரியுமா உங்களுக்கு..!

1977ஆம் அண்டு 24 கேரட் தங்கத்தின் விலை 10 கிராம் வெறும் 486 ரூபாய், அதாவது ஒரு கிராம் 48.60 ரூபாய் மட்டுமே. இதன் மூலம் 1000 ரூபாய் முதலீட்டுக்கு ஒருவர் அப்போதைய காலகட்டத்தில் 20.58 கிராம் வாங்கியிருக்கலாம்.

இன்று 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 1,55,000 ரூபாய். கிட்டத்தட்ட 1 கிராம் 15500 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. இதன் மூலம் 1977ஆம் ஆண்டு வாங்கப்பட்ட 20.58 கிராம் தங்கத்தின் மதிப்பு என்பது இன்று 3.19 லட்சம் ரூபாயாக உள்ளது.

இதுவே 1977ஆம் ஆண்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஐபிஓ-வில் ஒரு பங்கு விலை 10 ரூபாய் வீதம் 1000 ரூபாய்க்கு 100 பங்குகளை வாங்கியிருக்க முடியும்.

ஆனால் பங்குச்சந்தையில் உங்களுடைய முதலீடு, வாய்ப்புகள் சாதமாக இருந்தால் போனஸ் பங்குகளாகக் குட்டிப்போடும். இப்படி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 6 முறை போனஸ் பங்குகளை வெளியிட்டு முதலீட்டாளர்களின் முதலீட்டைக் குட்டிப்போட வாய்ப்பு கொடுத்து உள்ளது. இதன் மூலம் 100 பங்குகள் 49 வருடத்தில் 4096 பங்குகளாக உயர்ந்திருக்கிறது.

இது மட்டுமா ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது நிதியியல் பிரிவைத் தனியாகப் பிரிக்கும் போது இந்த 4096 பங்குகளுக்கு 2,048 ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் கிடைத்திருக்கும்.

இதன் மூலம் 1977ல் செய்யப்பட்ட வெறும் 1000 ரூபாய் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஐபிஓ-வின் மதிப்பு இன்றைய சந்தை மதிப்பீட்டில் கிட்டத்தட்ட ரூ.52 லட்சமாகும்.

இதை தாண்டி டிவிடெண்ட் வருமானம், இந்த வருமானத்தை மீண்டும் ரிலையன்ஸ் பங்குகளை வாங்குவதில் முதலீடு செய்திருந்தால் அதிகப்படியாக 1 கோடி ரூபாய் வரையில் கிடைத்திருக்கும்.

ஆனால் நாம் இப்போது 52 லட்சம் ரூபாய் அளவீட்டை வைத்து மட்டுமே கணக்கிட்டாலும், தங்கத்தில் செய்யப்பட்ட முதலீட்டை விட ரிலையன்ஸ் பங்கு முதலீட்டில் கிடைத்த லாபம் என்பது 17.24 மடங்கு அதிகம்.

இதேவேளையில் 1977ஆம் ஆண்டு பங்குச்சந்தைக்கு வந்த நிறுவனங்களில் எத்தனை நிறுவனங்கள் இத்தகைய லாபத்தைக் கொடுக்கிறது..? எத்தனை நிறுவனங்கள் இன்றும் பங்குச்சந்தையில் வர்த்தகமாகிறது..? எத்தனை நிறுவனங்கள் இந்த இடைப்பட்ட 49 ஆண்களில் காணாமல் போயுள்ளது..?

பங்குச்சந்தை முதலீட்டைப் பொருத்த வரையில், நாம் எந்த நிறுவனத்தைத் தேர்வு செய்து முதலீடு செய்கிறோம் என்பதைத் தாண்டி, அதன் மீதான தொடர் கண்காணிப்பு மிகவும் அவசியம். இதேபோல் நிறுவனத்தின் செயல்பாடுகள், அதன் வர்த்தகம், வருமானம், வளர்ச்சி ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணித்து முதலீட்டைத் தக்க வைப்பது மூலம் கட்டாயம் நம்முடைய முதலீடு பல மடங்கு உயரும்.

பங்குச்சந்தையில் நீண்டகாலம் ஓரே நிறுவனத்தில் வைத்திருந்தால் லாபம் கட்டாயம் கிடைக்கும் என்பதெல்லாம் பொதுவான கருத்து, இது நிஜ உலகில் கட்டாயம் வெற்றியைக் கொடுக்காது. இத்தகைய சூழ்நிலையில் ஜியோ ஐபிஓ எத்தகைய வெற்றி அடையும்..? பதிலை கமெண்ட் பண்ணுங்க.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+