தங்கமும் வெள்ளியும் இந்த ஆண்டு போட்டி போட்டுக் கொண்டு உயர்ந்திருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை தீபாவளி பண்டிகையின் போது தந்தேராஸ் எனப்படும் சிறப்பு நாளில் தங்கம் வாங்கி வைத்தால் வீட்டில் செல்வ வளம் பெருகும் என்ற நம்பிக்கை மக்களிடையே இருக்கிறது . இதன் காரணமாக மக்கள் தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தாலும் தங்களால் முடிந்த அளவிற்கு ஒரு கிராம் ஆவது வாங்கி வைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள்.
குறிப்பாக வட இந்திய மாநிலங்களில் இந்த தந்தேராஸை முன்னிட்டு தங்கம் வாங்கும் போக்கு அதிகமாகவே இருக்கிறது. இந்த ஆண்டு தங்கம் விலை பல வரலாறு காணாத உச்சத்தை எட்டி இருக்கிறது . அதை விட வேகமாக வெள்ளி விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இவற்றின் விற்பனையில் பெரிய மாற்றத்தையே கொண்டு வந்துள்ளது.

இந்த ஆண்டில் மட்டும் தீபாவளியை முன்னிட்டு மக்கள் கைகளில் இருந்து 1 லட்சம் கோடி ரூபாயை செலவு செய்திருக்கிறார்கள். ஜிஎஸ்டி வரி குறைப்பு இந்த ஆண்டு பண்டிகை கால விற்பனை களை கட்ட முக்கிய காரணம் ஆகும். அனைத்திந்திய வர்த்தகர்களுக்கான கூட்டமைப்பு பண்டிகை தொடங்கும் முன்பாகவே 1 லட்சம் கோடி ரூபாயை மக்கள் செலவு செய்திருக்கிறார்கள் என தெரிவித்துள்ளது.
குறிப்பாக தீபாவளிக்கு தங்கம் வெள்ளி விலை உயரும் என்ற அச்சம் காரணமாக மக்கள் சுமார் 60,000 கோடி ரூபாய்க்கு தங்கம் மற்றும் வெள்ளி வாங்கி இருப்பதாக அனைத்திந்திய வர்த்தக கூட்டமைப்பு தெரிவிக்கிறது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு 25% அதிகமாகும். இன்றைய நிலவரப்படி இந்தியாவில் 24 கேரட் தங்கம் 10 கிராமின் விலை 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் என்ற நிலையை எட்டிவிட்டது .
நேற்றைய தினம் திடீரென தங்கம் விலை சரிவடைந்தது நிலை நிலையில் நேற்று மற்றும் இன்று ஆகிய இரண்டு நாட்களும் நகை கடைகளில் அதிகளவிலான மக்கள் வருகையை காண முடிந்ததாக அனைத்து இந்திய நகை விற்பனையாளர்கள் கூட்டமைப்பு தலைவரான பங்கஜ் அரோரா தெரிவித்திருக்கிறார். இந்த ஆண்டு தங்கத்துக்கு நிகராக வெள்ளியை வாங்கும் போக்கும் மக்களிடையே அதிகரித்திருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார் .
டெல்லியில் மட்டுமே இந்த தீபாவளியை முன்னிட்டு தங்கம் மற்றும் வெள்ளி 10,000 கோடி ரூபாய் அளவிற்கு விற்பனையாகி இருப்பதாக அவர் கூறுகிறார் .தங்கத்தின் விலை அதிகமாக இருக்கும் காரணத்தினால் இது நாள் வரை தங்கம் வாங்கி இருந்த பலரும் தற்போது வெள்ளியை நோக்கி வந்திருக்கிறார்கள் என பிடிஐ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடுகிறது .
இதன் காரணமாக இந்த ஆண்டு தங்கத்தை விட அதிக அளவில் வெள்ளி தான் விற்பனை ஆகி இருப்பதாக நகை கடை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஆண்டு தங்கம் மற்றும் வெள்ளியில் நகைகளுக்கு மாற்றாக நாணயங்கள் வாங்கும் போக்கு அதிகரித்து இருக்கிறதாம். அதிலும் வெள்ளி நாணயங்கள் வாங்குவது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு 40% அதிகரித்து இருப்பதாக பிடிஐ நிறுவனத்தின் செய்தி கூறுகிறது .
அனைத்திந்திய நவரத்தின மற்றும் நகைகளுக்கான உள்நாட்டு கவுன்சில் தலைவர் ராஜேஷ் தங்கம், வெள்ளி விலை உயர்ந்தாலும் இந்த பண்டிகை காலத்தில் இந்த சிறப்பு நாளில் அவற்றை வாங்கி விட வேண்டும் என்ற மக்களின் எண்ண ஓட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை இதன் காரணமாக இந்த ஆண்டும் நகைக்கடைகளுக்கு மக்களின் வருகை அதிகமாக இருந்தது என்கிறார். ஆனால் இந்த முறை மக்கள் தங்கத்திற்கு மாற்றாக அதிகமாக வெள்ளியை வாங்குவதை பார்க்க முடிந்தது என தெரிவித்திருக்கிறார்.
இந்த ஆண்டு தங்கத்தின் விற்பனை 15 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது , ஆனால் மதிப்பு என்ன பார்க்கும்போது தங்கத்தின் விலை உயர்வால் அதிகரித்து இருக்கிறது என கூறுகிறார் . இந்த பண்டிகை காலத்தில் 50,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக தங்கம் விற்பனையாகும் என நம்புவதாக அவர் தெரிவித்திருக்கிறார். இந்த ஆண்டு தங்கம் மற்றும் வெள்ளி அடுத்ததாக வீட்டு உபயோக பொருட்கள் அதாவது எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக்கல் பொருட்கள் விற்பனையும் வாகன விற்பனையும் களைகட்டியுள்ளது.
இதில் வீட்டு உபயோக பொருட்களே 10,000 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறதாம். மேலும் 3,000 கோடி ரூபாய்க்கு வீட்டுக்கு தேவையான அலங்கார பொருட்கள் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கிறதாம். மற்ற பொருட்கள் சுமார் 15,000 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு தெரிவிக்கிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

Silver Crash: தங்கத்தை விடுங்க.. வெள்ளியோட ஆட்டத்தை பாருங்க! முதலீடு செய்ய இது சரியான நேரமா?



Click it and Unblock the Notifications