சம்வத் 2083-ல் தங்கமா, வெள்ளியா? 68% சரிவுக்குப் பின் ஜாக்பாட் அடிக்குமா சில்வர்? அதிக லாபம் தரப்போவது எது?

முகூர்த் டிரேடிங் உடன் சம்வத் 2083 நிதியாண்டு துவங்கியிருக்கும் வேளையில், இந்த ஆண்டு எந்த உலோகம் அதிகப்படியான லாபத்தை ஈட்டித்தரும் என்பதற்கான விவாதம் சந்தையில் துவங்கியுள்ளது.

இஸ்ரேலில் அரபு கட்சிகள் ஆதரவில் புதிய அரசு, ஈரான் மீது தாக்குதல் நடத்தத் திட்டமில்லை என டிரம்ப் வெளிப்படையாக அறிவித்தது, அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிகார மாற்றம், ஏஐ முதலீட்டில் இருந்து அச்சம் மாற்றி தற்போது சரிவை முதலீட்டு வாய்ப்பாகப் பார்க்கும் மனநிலை ஆகியவை முதலீட்டுச் சந்தையை மீண்டும் இயல்பு நிலைக்கு மாற்றி வருகிறது.

சம்வத் 2083-ல் தங்கமா, வெள்ளியா? 68% சரிவுக்குப் பின் ஜாக்பாட் அடிக்குமா சில்வர்? அதிக லாபம் தரப்போவது எது?

இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் மீண்டும் உலோகம் முக்கியமான முதலீடாக மாறும் வாய்ப்பு உருவாகியிருக்கும் காரணத்தால் தங்கம், வெள்ளி, பிளாட்டினம், காப்பர் மத்தியில் எதில் அதிக லாபம் கிடைக்கும் என்பது தற்போது முக்கிய விவாத பொருளாக மாறியுள்ளது.

லெமான் நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவின் தலைவராக இருக்கும் கௌரவ் கார்க் கூறுகையில், இந்த 4 உலோகத்தில் கடந்த 10 மாதத்தில் அதிகம் சரிந்த உலோகம் வெள்ளி, இதனால் வேகமாகவும் அதிகமாகவும் உயர்வதற்கான வாய்ப்புகள் வெள்ளிக்கு அதிகமாக உள்ளது என கூறியுள்ளார்.

வெள்ளி விலை அதன் உச்ச நிலையான 121.67 டாலரில் இருந்து 53.26 டாலருக்கு குறைந்துள்ளது, கிட்டத்தட்ட 68 சதவீதம் குறைவானது. இதேபோல், தங்கம் 26 சதவீத சரிவிலும், காப்பர் 10 சதவீத சரிவிலும் உள்ளது. இதேபோல் கோல்டு - சில்வர் ரேஷியோ 50ல் இருந்து 77 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் வெள்ளிக்கான முதலீட்டு வாய்ப்புகளும், வளர்ச்சி வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது என கணித்துள்ளார் கௌரவ் கார்க் தெரிவித்துள்ளார்.

இதேபோல் வெள்ளியில் முக்கியமான ஒரு பிரச்சனை உள்ளது, எந்தளவுக்கு வேகமாக உயர்கிறதோ அதே அளவுக்கு வேகமாக சரியும், உதாரணமாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெள்ளி விலை ஒரே நாளில் 20 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

இதனால் ஒரே நாளில் 20 சதவீதம் வரையிலான சரிவை எதிர்கொள்ள நீங்கள் தயாரா என்பது தான் முதலீட்டாளர்கள் தங்களையே கேட்டுக்கொள்ளும் ஒரு கேள்வியாக உள்ளது. மேலும் வெள்ளி விலை வேறு எந்த உலோகம் போல் அல்லாமல் அக்டோபர் மாதத்தில் 200 நாள் சராசரி அளவை காட்டிலும் 25 சதவீதம் குறைவாக உள்ளது.

காப்பர் அதன் செப்டம்பர் மாத உயர்வுடன் ஒப்பிடுகையில் வெறும் 7 சதவீதம் மட்டுமே குறைவாக உள்ளது. கௌரவ் கார்க் கணிப்புகள் படி, ரிஸ்க் ஏற்றுக்கொள்ள, இழப்பை தாங்கிக்கொள்ள மனம் இருந்தால் மட்டுமே வெள்ளியில் முதலீடு செய்ய வேண்டும். அதாவது volatility என்னும் ரிஸ்க்-ஐ ஏற்றுக்கொள்ளும் மனம் வேண்டும். இந்த மன வலிமை இருந்தால் மட்டுமே வெள்ளியில் முதலீடு செய்யுங்கள்.

சம்வத் 2083 என்பது இந்து மதம் பின்பற்றும் ஒரு நாட்காட்டி முறையாகும், உலக நாடுகள் ஜனவரியையும், இந்திய அரசு ஏப்ரல் மாதத்தையும் நிதியாண்டின் துவக்கமாக கருதினாலும், இந்தியாவின் முக்கிய வர்த்தக சமூகங்களான மார்வாரி மற்றும் குஜராத்தி சமூகங்கள் தீபாவளியை ஒட்டி வரும் குஜராத்தி கார்திகாதி பஞ்சாங்க சம்வத் புத்தாண்டையே புதிய கணக்கு ஆண்டின் தொடக்கமாகக் கருதுகின்றனர்.

விக்ரம் சம்வத் 2083-ம் குஜராத்தி கார்திகாதி பஞ்சாங்க சம்வத் புத்தாண்டும் கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு பின்பு துவங்குகிறது. இந்த நாளில் லட்சுமி பூஜை செய்து, பழைய கணக்கு புத்தகங்களை முடித்து, புதிய கணக்கு புத்தகத்தை இந்த சமூகங்கள் துவங்குகின்றனர்.

இதேபோல் ஆங்கில நாட்காட்டி என்பது சூரியனின் இயக்கத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் இந்த சம்வத் நாட்காட்டி சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இரண்டின் இயக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டது.

சம்வத் 2083 துவக்கத்தை உணர்த்தும் வகையில் தீபாவளி தினத்தில் இந்தியப் பங்குச் சந்தையில் சிறப்பு வர்த்தகம் முகூர்த் டிரேடிங் நடத்தப்பட்டு புதிய நிதியாண்டு துவக்கத்தை கொண்டாடுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+