தங்கம், வெள்ளி மீது முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் தொடர்ந்து உன்னிப்பாக கவனித்தும் gold silver ratio இந்த ஆண்டு முழுவதும் பெரும் தடுமாற்றத்தில் இருந்த நிலையில் தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. இன்றைய வர்த்தக முடிவில் செவ்வாய்க்கிழமை இந்த விகிதம் 68 ஆக உயர்ந்தது.
இதை எளிதாக விளக்க வேண்டுமானால், தங்கம் மற்றும் வெள்ளியின் விலையை ஒப்பிடுவதற்கான ஒரு முக்கிய அளவுகோல் தான் இந்த தங்கம்-வெள்ளி விகிதம். இந்த விகிதம் தங்கம் மற்றும் வெள்ளியில் எது வலுவாக செயல்படுகிறது என்பதை புரிந்துகொள்ள உதவுகிறது.

இந்த தங்கம் - வெள்ளி விகிதம் உயர்ந்தால், தங்கத்தின் விலை வெள்ளியை விட சிறப்பாக உயர்கிறது என்பது அர்த்தம். இதேவேளையில் விகிதம் குறைந்தால், வெள்ளி தங்கத்தை விட சிறப்பாக செயல்படுகிறது என்று அர்த்தம். தங்கம்-வெள்ளி விகிதம் தற்போது 68 ஆக உயர்ந்ததுள்ளது, அப்படியானால் 1 அவுன்ஸ் தங்கத்தை வாங்க 68 அவுன்ஸ் வெள்ளி தேவைப்படுகிறது என பொருள்.
தங்கம் - வெள்ளி விகிதம் 50-60 அளவில் இருந்தால் தங்கம் மலிவானதாகவும், வெள்ளி அதிக விலையிலும் இருப்பதாக பொருள். இதுவே 80க்கும் அதிகமாக இருந்தால் வெள்ளி விலை மலிவானதாக இருப்பதாக பொருள்.
2026ஆம் ஆண்டில் தங்கம் வெள்ளி விகிதம் தொடர்ந்து அதிகப்படியான ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இதற்கு மிக முக்கியமான காரணம் ஈரான் போரும், அமெரிக்க பத்திர முதலீட்டில் கிடைக்கும் அதிகப்படியான லாபம் தான்.
தற்போது முதலீட்டுச் சந்தையில் மீண்டும் வெள்ளி முக்கிய முதலீடாக மாறி வருவதும் தங்கம் விலைக்கு ஆபத்தாக மாறி வருகிறது. தங்கம் விலை அதிகரித்தும் வரும் காரணத்தால் வெள்ளி நகைகள் வாங்குவது வரையில் வெள்ளியை வாங்குவது வரையில் முதலீட்டாளர்கள் வெள்ளிக்கு அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்த கலவையான சூழ்நிலையில் தங்கத்திற்கு ஓரே ஆதரவாக இருப்பது மத்திய வங்கிகளின் தங்கக் கொள்முதல் தான். சீனா, இந்தியா போன்ற பல வளரும் நாடுகள் தங்கத்தைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த கலவையான சூழ்நிலையில் அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ்-ன் போக்கு தான் தங்கம் விலையைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருப்பதால் இந்த வருடத்தின் இறுதிக்குள் அமெரிக்க நாணய கொள்கை தளர்வாகி தங்கம் விலை சரிவில் பாதையில் இருந்து மீளும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
