தங்கத்தை விட வெள்ளி தான் டாப்பு! 6 வருஷத்துல ரூ.1 லட்சம் ரூ.5 லட்சமா மாறிடுச்சே! 400 சதவீத லாபம்!

ஒரு காலத்தில் ரூ.5000-த்திற்குள் விற்பனை செய்யப்பட்ட 1 கிராம் தங்கம் இன்று ரூ.15,000-த்தை கடந்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் சென்றாலும், அதை விரும்பி வாங்குவோரின் எண்ணிக்கை இன்னும் குறைந்தபாடில்லை. காரணம் தங்கத்தை வைத்து எளிதில் பணம் பெறலாம். ஆனால் மற்ற முதலீடுகளில் போட்ட பணத்தை அவசரத்திற்கு திரும்பப் பெற முடியாது. இதுவும் தங்கத்தை மக்கள் விரும்பி வாங்க ஒரு காரணமாக அமைகிறது.

அதோடு சில ஆண்டுகளாக தங்கம் கொடுக்கும் ரிட்டன்ஸ் முதலீட்டாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. அப்படி எவ்வளவு லாபம் கொடுத்திருக்கிறது என்றுதானே நினைக்கிறீர்கள்? இதை தெரிந்து கொள்ள 20, 30 ஆண்டுகளுக்கு முன்னரெல்லாம் செல்ல தேவையில்லை. வெறும் 6 ஆண்டுகளுக்கு முன்னர் தங்கம் விற்பனை செய்யப்பட்ட விலையையும், தற்போது தங்கம் விற்பனை செய்யப்படும் விலையையும் ஒப்பிட்டால் விடை கிடைத்து விடும்.

2020-ஆம் ஆண்டை யாராலும் மறக்க முடியாது. கோவிட் பெருந்தொற்று ஏற்பட்டு உலகமே ஸ்தம்பித்துப் போயிருந்தது. லாக்டவுன் போடப்பட்டு, கடைகள் அடைக்கப்பட்டன, பங்குச்சந்தைகள் சரிந்தன, பலருக்கும் வேலை வாய்ப்பே கேள்விக்குறியானது. அந்த சமயத்தில் தங்கத்திலும் விலை ஏற்ற இறக்கங்கள் தென்படத்தான் செய்தது. இருந்தாலும் அப்போதைய பாதுகாப்பான முதலீடாக தங்கம் கருதப்பட்டது.

தங்கத்தை விட வெள்ளி தான் டாப்பு! 6 வருஷத்துல ரூ.1 லட்சம் ரூ.5 லட்சமா மாறிடுச்சே!

எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலை வந்தாலும் முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாகக் கருதி அதிகம் வாங்குவார்கள். அப்படி ஒருவர் 2020-இல் ரூ.1 லட்சத்திற்கு தங்கம் வாங்கியிருந்தால் தற்போது எவ்வளவு லாபம் பார்த்திருப்பார் தெரியுமா?

2020 ஆம் ஆண்டின் தங்க விலை: 2020-ஆம் ஆண்டில் 2 கிராம் தங்கத்தின் விலை தோராயமாக 5000 ரூபாயாக இருந்தது. அப்போது ஒருவர் ரூ.1 லட்சத்திற்கு தங்கம் வாங்கியிருந்தால் 20 கிராம் தங்கத்தை வாங்கியிருப்பார். அதாவது 2.5 சவரன் தங்கம் கிடைத்திருக்கும்.

2020-இல் தங்க விலை = 1,00,000 / 5000 = 20 கிராம்

2026-இல் தங்கம் விலை: தற்போது 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.15.200-ஐ கடந்து சென்று கொண்டிருக்கிறது. 2020-ஆம் ஆண்டில் வாங்கிய 20 கிராம் தங்கத்தின் மதிப்பு 2026-இல் ரூ.3,04,000 மாறி இருக்கும். வெறும் 6 ஆண்டுகளில் தங்கத்தின் மூலம் கிடைத்த வருமானம் ரூ.2,04,000. கிட்டத்தட்ட 200 சதவீத ரிட்டன்ஸை கடந்த ஆறு ஆண்டுகளில் தங்கம் கொடுத்துள்ளது.

2026-இல் தங்க விலை = 20 X 15.200 = ரூ.3,04,000

தங்கம் மட்டுமல்ல வெள்ளியின் விலையும் கடந்த 6 ஆண்டுகளில் அபாரமாக அதிகரித்துள்ளது. 2020-ஆம் ஆண்டில் 1 கிராம் வெள்ளி தோராயமாக 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அப்போது நீங்கள் ரூ.1 லட்ச ரூபாய்க்கு வெள்ளி வாங்கியிருந்தால் 2 கிலோ வெள்ளி வாங்கி இருப்பீர்கள்.

2026-ஆம் ஆண்டு நிலவரப்படி 1 கிராம் வெள்ளியின் விலை ரூ.285-ஆக உயர்ந்திருக்கிறது 2020-ல் வாங்கிய 2 கிலோ வெள்ளியின் மதிப்பு தற்போது ரூ.5,70,000-ஆக இருக்கும்.

2026-இல் வெள்ளி விலை = 2000 X 285 = ரூ.5,70,000

இதில் வெள்ளி வாங்கிய ரூ.1 லட்சத்தை கழித்தால் கிடைத்த லாபம் ரூ.4,70,000. கிட்டத்தட்ட 470 சதவீத லாபத்தை வெள்ளி கொடுத்துள்ளது. தங்கம் கொடுத்த லாபத்தை விட வெள்ளி இன்னும் அதிக லாபத்தை கொடுத்துள்ளது. இதிலிருந்து என்ன தெரிகிறது இன்று விலை அதிகம் என்று தோன்றுவது இன்னும் சில ஆண்டுகளில் விலை குறைவு என்று தோன்ற வைக்கும். எனவே காலத்திற்கு ஏற்ப சரியான விஷயங்களை தேர்ந்தெடுத்து முதலீடு செய்வது உங்கள் லாபத்தை பன்மடங்கு அதிகரிக்கும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+