சென்னை: சர்வதேச அளவில் தங்கம் மற்றும் வெள்ளிக்கான டிமாண்ட் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அவற்றின் விலையும் உயர்ந்த வண்ணமே இருக்கிறது. தீபாவளி பண்டிகை வர இருக்கும் சூழலில் இந்த தீபாவளிக்கு தங்கத்தில் முதலீடு செய்யலாமா அல்லது தங்கத்துக்கு நிகராக டிமாண்டில் இருக்கும் வெள்ளியில் முதலீடு செய்யலாமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்த 12 மாத காலத்தில் பார்க்கும் போது தங்கம் 28% லாபத்தையும் வெள்ளி 33 சதவீத லாபத்தையும் தந்துள்ளது. இதனால் தான் இத்தனை காலம் தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கெல்லாம் இனி வெள்ளியில் முதலீடு செய்யலாமா என்ற யோசனை பிறந்துள்ளது. அண்மையில் வென்சுரா செக்யூரிட்டி என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் அமெரிக்க அரசு பொருளாதார தடைகளை விதித்திருக்கும் நாடுகள் எல்லாம் தங்கத்தை அதிகளவில் வாங்கி இருப்பு வைக்கின்றன என்பது தெரிய வந்துள்ளது. அந்த நாடுகள் பணவீக்கத்தை எதிர்த்து போராடுவதற்கான ஒரு ஆயுதமாக தங்கத்தை பயன்படுத்தப்படுகின்றன.

இதனால்தான் தங்கத்தின் விலை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தை அடைந்துள்ளது. அது மட்டும் இன்றி இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் தங்கத்தின் டிமாண்டை இன்னும் அதிகரிக்கச் செய்துள்ளது. சர்வதேச அளவில் முதலீட்டாளர்கள் பங்குச் சந்தைகள் மற்றும் பிற முதலீடுகளை தவிர்த்து தங்கத்தையே பாதுகாப்பான முதலீடாக கருதுகின்றனர். இந்த நிலையில் இந்தியாவில் தீபாவளி பண்டிகையின் போது தங்கம் வாங்கும் மக்களின் எண்ணிக்கை அதிகம்.
தீபாவளி பண்டிகைக்கு பிறகு நிறைய முகூர்த்த தினங்கள் வரும் என்பதால் திருமணத்திற்காக தங்கம் வாங்குவதும் இனி வரும் மாதங்களில் அதிகரிக்கும். எனவே இதுவும் இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்வுக்கு ஒரு காரணமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
கடந்த 2012 ஆம் ஆண்டுக்குப் பிறகு வெள்ளிக்கான தேவை அதிகரித்துவிட்டது. அமெரிக்காவை சேர்ந்த சில்வர் இன்ஸ்டிட்யூட் வெளியிட்டுள்ள கணிப்பின்படி 2024 ஆம் ஆண்டில் 1.219 பில்லியன் அவுன்சுகள் வெள்ளி தேவைப்படுமாம், தற்போது 1.04 பில்லியன் அவுன்ஸ் வெள்ளி மட்டுமே சப்ளையில் இருக்கிறது.
எனவே இந்த ஆண்டிலேயே 215 மில்லியன் அவுன்சுகள் வெள்ளிக்கு பற்றாக்குறை இருக்கிறது. எனவே 2025 ஆம் ஆண்டில் வெள்ளி பற்றாக்குறை இன்னும் அதிகரிக்கும். பல்வேறு நாடுகளும் தற்போது சோலார் மின் உற்பத்தியில் கவனம் செலுத்தி வருவதால் வெள்ளிக்கான தேவை தொடர்ந்து அதிகரிக்கும் என தெரிவிக்கிறது.
எனவே தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து ஏற்றத்தில் தான் இருக்கும் என்கிறது இந்த நிறுவனம். இந்த சூழலில் ஆனந்த் ரதி முதலீட்டு பரிந்துரை நிறுவனத்தின் இயக்குனர் ரிஷிகேஷ் பால்வே தனிப்பட்ட தேவைகளுக்காக வேண்டுமென்றால் தங்கத்தை வாங்கலாம் என்றும் உங்கள் முதலீட்டில் ஏற்கனவே 10 சதவீத தொகையை தங்கத்திற்காக ஒதுக்கீடு செய்திருந்தால் இனி தங்கத்தின் மீது கவனம் செலுத்தாமல் ஈக்விட்டி சந்தைகளில் முதலீடு செய்யலாம் என கூறுகிறார். தற்போது தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தில் இருக்கும் போது முதலீட்டாளர்கள் வெள்ளியை நோக்கி கவனத்தை திருப்பலாம் என சில முதலீட்டு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
வெள்ளி ஒரு முதலீடாக இருக்கிறது என்பதோடு மட்டுமில்லாமல் தற்போது பல்வேறு தொழில்துறைகளுக்கு பயன்படுத்தப்படும் ஒரு உலோகமாகவும் இருக்கிறது. எனவே வரும் நாட்களில் வெள்ளிக்கான டிமான்ட் அதிகரிக்கும். தற்போது வெள்ளி உற்பத்தியும் குறைவாக இருப்பதால் வெள்ளியின் விலையும் ஏற்றத்தில் தான் இருக்கும். எனவே வெள்ளியில் முதலீடு செய்தால் நல்ல லாபத்தை பார்க்கலாம் என சொல்கின்றனர். எனவே முதலீடுக்காக வைத்திருக்கும் தொகையில் 50 சதவீத தொகையை தங்கத்திலும் 50 சதவீத தொகையை வெள்ளியிலும் முதலீடு செய்தால் சிறப்பாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
Written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!



Click it and Unblock the Notifications