முதலீடு என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது தங்கம் தான். ஆனால், கடந்த சில காலங்களாக தங்கத்தையே ஓரம் கட்டும் வேகத்தில் எகிறிக் கொண்டிருக்கிறது வெள்ளி. 2025-ல் யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 170% லாபத்தை அள்ளிக் கொடுத்து, முதலீட்டாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. நடப்பு ஆண்டிலும் ஒரு கிலோ வெள்ளி விலையானது 4 லட்சத்தை தாண்டி பயணம் செய்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் தங்கம் வாங்குவது லாபமா அல்லது வெள்ளியில் முதலீடு செய்வது புத்திசாலித்தனமா? என்ற விவாதம் சூடுபிடித்துள்ளது.

மொபைல் போன்கள், சோலார் பேனல்கள் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்கள் என தொழில்துறையில் வெள்ளிக்கான தேவை அதிகரித்து வருகிறது. அதேசமயம் பாதுகாப்பு புகலிடமாக தங்கம் தனது அந்தஸ்தை தக்க வைக்க போராடுகிறது. இவ்விரண்டில் நடப்பு ஆண்டில் உங்கள் பணத்தை பலமடங்கு பெருக்கப்போகும் அந்த கிங் யார்? தங்கத்தின் ஜொலிப்பு நீடிக்குமா அல்லது வெள்ளியின் வேகம் முந்துமா? முதலீட்டாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? வாருங்கள் தெரிந்து கொள்வோம்.
பூமிக்கு அடியில் 4 கி மீ! ஆச்சரியப்படுத்தும் உலகின் ஆழமான சுரங்கம்- வருஷத்துக்கு 8,000 கிலோ தங்கம்!
வெள்ளி விலையில் ஏற்பட்ட இந்த அபரிமிதமான ஏற்றத்திற்கு பின்னால், பல முக்கிய காரணங்கள் ஒளிந்துள்ளன. குறிப்பாக, உலக நாடுகளுக்கு இடையிலான புவிசார் அரசியல் பதற்றம், உலகளவில் நிலவும் வெள்ளியின் தட்டுப்பாடு, அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சி மற்றும் அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி குறைப்பு எதிர்பார்ப்பு போன்றவை வெள்ளியை ஒரு கிங்காக மாற்றியது.

2026-ம் ஆண்டு தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டுமே ஒரு வலுவான தொடக்கத்தை கண்டன. குறிப்பாக, தங்கம் ஈட்டும் லாபத்தை விட வெள்ளி அதிக லாபத்தை அள்ளி கொடுத்தது. ஆனால் இந்த மகிழ்ச்சி ரொம்ப காலம் நீடிக்கவில்லை. ஏனெனில் தொடர்ந்து கடந்த ஆண்டு முதல் ஏற்றம் கண்டு வரும் வெள்ளியானது புராபுட் புக்கிங் காரணமாக, ஜனவரி மாத இறுதியில் அதிகப்படியான விற்பனை அழுத்தம், அதுவரை வெள்ளி ஈட்டிய லாபத்தில் பாதியை துடைத்து எறிந்துவிட்டது.
ஜனவரி மாதம் வெள்ளி ஒரு கிலோ 4,20,048 ரூபாய் என்ற உச்சத்தை தொட்டு சாதனை படைத்தது. ஆனால் தற்போது அந்த உச்ச விலையிலிருந்து கிட்டத்தட்ட 40% சரிந்து வர்த்தகமாகி வருகிறது. தங்கம் விலையானது 19% சரிவில் காணப்படுகிறது.
நிர்மல் பேங்க் தரகு நிறுவன அறிக்கையின் படி, வெள்ளியின் ராஜ்ஜியம் தற்காலிகமாக முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது. தங்கத்தை விட வெள்ளி அதிக லாபம் தரும் காலம் முடிவடைந்து விட்டது. இனி வரும் காலங்களில் வெள்ளியை விட தங்கம் சிறந்த லாபத்தை தரும். சந்தையில் வெள்ளியின் தேவையானது மெதுவாக குறையத் தொடங்கியுள்ளது. அதோடு வெள்ளிக்கு இருந்து வந்த தட்டுப்பாடானது சீராகி உள்ளது. ஆக இனி வரும் மாதங்களில் வெள்ளி விலை பெரிய அளவில் ஏற்றம் காண வாய்ப்பு குறைவு என கூறியுள்ளது. ஆக நடப்பு ஆண்டில் தங்கம் லாபகரமான முதலீடாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

சூப்பர்பவர் ஆக மாறிய தங்கம்.. ஈரான் போருக்கு மத்தியில் பூகம்பம்..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

கோயம்புத்தூர்: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. இனி தொடர்ந்து உயருமா..?

தங்கம் விலையில் திடீர் மாற்றம்! சென்னை & கோவையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன?

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று என்ன நிலவரம்? நிபுணர்கள் சொல்வது என்ன? இது தான் நல்ல சான்ஸ்..!!



Click it and Unblock the Notifications