அடிசக்க.. 43000 ரூபாய் சரிவில் தங்கம் விலை.. இப்படியொரு சான்ஸ் இனி கிடைக்காது!

தீபாவளி, தன்தேரஸ் பண்டிகளை முடிந்ததும் இந்தியாவில் அனைத்து ரீடைல் கடைகளும் வெறிச்சோடி கிடக்கிறது, ஆனால் நகை கடைகளில் மட்டும் இன்னும் கூட்டம் நிரம்புகிறது. இதற்கு முக்கிய காரணம் தங்கம் விலையில் ஏற்பட்ட திடீர் சரிவு + திருமண சீசன் துவங்கியதும் தான் .

நவம்பர் மாதம் முதலீட்டுச் சந்தையில் பல முக்கியமான மாற்றங்கள் நடந்திருக்கும் வேளையில் தங்கம் விலையில் பெரிய யூ-டர்ன் அடித்துள்ளது. அமெரிக்க மிட்டேர்ம் தேர்தலில் துவங்கி ஏஐ முதலீட்டு சந்தையில் சரிவு, தற்போது அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வட்டி விகித உயர்வு வரையில் அனைத்தும் தங்கம் விலையைப் பாதித்துள்ளது.

அடிசக்க.. 43000 ரூபாய் சரிவில் தங்கம் விலை.. இப்படியொரு சான்ஸ் இனி கிடைக்காது!

இதில் முக்கியமாக அமெரிக்காவில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால் அடுத்த மாதம் நடக்கும் நாணய கொள்கை கூட்டத்தில் பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் வரையில் உயர்த்தும் எனக் கணிக்கப்படுவதால் தங்கம் விலை கடந்த 2 நாட்களாக அதிரடியாகச் சரிந்து வருகிறது.

சென்னை ரீடைல் சந்தையில் நேற்று 213 ரூபாயும், இன்று 218 ரூபாயும் தங்கம் விலை சரிந்து தற்போது 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை 13,980 ரூபாயாக உள்ளது. இதேவேளையில் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் உச்ச விலையிலான 1,83,280 ரூபாயில் இருந்து தற்போது 1,39,800 ரூபாயாகக் குறைந்துள்ளது. இதன் மூலம் தங்கம் விலை தனது உச்ச விலையில் இருந்து சுமார் 43480 குறைந்து மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

Also Read

தீபாவளி, தன்தேரஸ் பண்டிகளை முடிந்தாலும், நவம்பர் மாதம் மத்தியில் இருந்து மார்ச் மாதம் வரையில் திருமண சீசன் துவங்கியிருக்கும் வேளையில் இந்தியாவில் மிக முக்கியமான நகை விற்பனை காலம் துவங்கியுள்ளதால் தங்க நகை விற்பனை மீண்டும் சூடுபிடிக்கும்.

நவம்பர் மாதத்திற்கு முன் வரையில் தங்கம் மீதான முதலீட்டில் ஒதுங்கியே இருந்த மக்கள் நவம்பர் மாதம் துவங்கியதும் அதிகளவில் ரீடைல் சந்தையிலும், முதலீட்டுச் சந்தையிலும் தங்கத்திற்காக முதலீடு செய்து வருகின்றனர்.

தங்கம் விலை உயர்ந்துள்ள காரணத்தால் செப்டம்பர் மாதம் வரையிலான ரீடைல் விற்பனையில் 50 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஆனால் எடை அளவில் பார்த்தால் குறைவு தான்.

தீபாவளி, தன்தேரஸ் பண்டிகையின் போது இந்தியாவில் 52 டன் தங்கமும், 300 டன் வெள்ளியும் விற்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே நீண்ட கால நோக்கில் தங்கம், வெள்ளியில் முதலீடு செய்வோர் விலை குறையும் போது அந்த வாய்ப்பை பயன்படுத்தி வாங்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+