இந்தியாவில் பணக்காரர்களாக இருந்தாலும் சரி, நடுத்தர மக்களாக இருந்தாலும் சரி, அவர்களின் முக்கியமான முதலீடு அல்லது சேமிப்புகளில் தங்கம் எப்போதும் முக்கிய பங்கு வகிக்கிறது. தங்கம் விலை இந்த வாரம் முதல் 2 நாட்களில் 2000 ரூபாய்க்கு மேல் சரிந்த நிலையில் புதன்கிழமை வர்த்தகத்தில் சிறிய அளவு உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் தங்கம் எப்போது வாங்க வேண்டும் என்ற குழப்பத்தில் மூழ்கியுள்ளனர்.
இப்படிப்பட்ட நிலையில் தான் உலகின் முன்னணி முதலீட்டு வங்கியான கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் தங்கம் விலை குறித்து முக்கியமான ஆய்வறிக்கையை வெளியிட்டு பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது. டிரம்ப் வந்துவிட்டால் தங்கம் விலை குறையும் என்ற கருத்து இருந்த நிலையில் அதை உடைத்து, சரிவெல்லாம் சிறிய காலம் தான் அடுத்த ஒரு வருடத்தில் தங்கம் எப்படி இருக்கும் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

கோல்டுமேன் சாக்ஸ் அறிக்கையின் படி சர்வதேச சந்தையில் தங்க விலை இன்று ஒரு அவுன்ஸ் 2653 டாலராக இருக்கும் வேளையில் 2025 டிசம்பர் மாதத்திற்குள் ஒரு அவுன்ஸ் 3,150 டாலரை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாகத் திடுக்கிடும் ஒரு கணிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தங்கம் விலை தற்போதைய விலையிலிருந்து சுமார் 19% உயரும் வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விலை உயர்வுக்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளதாகக் கூறும் கோல்டுமேன் சாக்ஸ், உலகளவில் தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கம், உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார சவால்கள், மற்றும் மத்திய வங்கிகளின் அதிகரிக்கும் தங்கம் வாங்கும் ஆர்வம் ஆகியவை முக்கிய காரணிகளாக இருக்கும் எனக் கணித்துள்ளது.
இதில் முக்கியமாக உலகின் பல நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கள் நாட்டின் பொருளாதார பாதுகாப்புக்காகத் தங்கத்தை ஒரு பாதுகாப்பு கருவியாக அதிகளவில் வாங்கி குவிக்கும் என கணித்துள்ளது. தற்போது உலக நாடுகளின் மத்திய வங்கி தங்கம் வாங்குவதை நிறுத்தியுள்ளது, உதாரணமாகச் சீன மத்திய வங்கி அக்டோபர் மாதம் முதல் 6 மாதத்திற்குத் தங்கம் வாங்குவதை நிறுத்துவதாக அதிகாரப்பூர்வமாகக் கடந்த மாதம் அறிவித்திருந்தது.
இதேவேளையில் அமெரிக்காவின் அதிகரிக்கும் கடன் சுமை மற்றும் உலகளாவிய வர்த்தகப் போக்குகளில் ஏற்படும் மாற்றங்கள், அமெரிக்க மத்திய வங்கிகளும் தங்கத்தை அதிகளவில் வாங்கத் தூண்டப்படும் என்றும் கோல்டுமேன் சாக்ஸ் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த அடுத்த சில வாரங்களுக்கு அல்லது மாதத்திற்குத் தங்கம் விலை சரிவு ஏற்பட்டாலும், அடுத்த ஒரு வருடத்தில் தங்கம் விலை 20 சதவீதம் வரையில் உயர்ந்து 3000 டாலரைத் தாண்டும் என்பது கோல்டுமேன் சாக்ஸ் கணிப்பு.
இருப்பினும், கோல்டுமேன் சாக்ஸ் தனது கணிப்பில் சில எச்சரிக்கைகளையும் தெரிவித்துள்ளது. அதிகரிக்கும் வட்டி விகிதங்கள் மற்றும் அமெரிக்க டாலரின் வலிமை, ஆகியவை தங்கத்தின் மீதான முதலீட்டைக் குறைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. ஆயினும் கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் 2025 டிசம்பர் மாதத்திற்குள் தங்க விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 3,000 டாலரை எட்டும் என நம்பிக்கையுடன் உள்ளது.
இந்த கணிப்பு உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். தங்கம் விலை உயர்ந்தால், நகைத் தொழில், தங்க சந்தை, மற்றும் அதைச் சார்ந்த தொழில்கள் பெரிதும் பாதிக்கப்படும். மேலும், இந்தியாவில் தீபாவளி மற்றும் திருமண சீசன்களில் தங்கம் அதிகளவில் வாங்கப்படுவதால், இந்த கணிப்பு இந்தியப் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
More From GoodReturns

இந்தியாவில் இன்று தங்கம், வெள்ளி விலை உயர்ந்ததா? குறைந்ததா?: லைவ் அப்டேட்ஸ்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு குட் நியூஸ்!! உலக சந்தையில் நடந்த பெரிய மாற்றம்!!

ஈரான் போர் முடிவுக்கு வந்ததும் தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போருக்கு பின்னர் நடந்த தலைகீழ் மாற்றம்!! இனி விலை என்ன ஆகும்?

ஈரான் போருக்கு மத்தியில் தங்கத்தை மறந்த இந்தியர்கள்..!! 15 நாட்கள்ல எல்லாமே மாறிடுச்சு..!!

கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் விலை அதிரடி சரிவு.. தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்..!

தங்கத்தைவிட வெள்ளி லாபமா? ரேஷியோ 72-ஐ தாண்டினால் என்னவாகும்?டாட்டா மியூச்சுவல் தரும் அப்டேட்?

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு.. நகைப்பிரியர்களுக்கு குட்நியூஸ்..!

கோயம்புத்தூர் தங்கம் விலை இன்று: பெரும் சரிவு! நகைப்பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு |

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!



Click it and Unblock the Notifications