தங்கத்தின் விலை தற்போது உச்சத்தில் உள்ளது. விலை குறைந்தால் கொஞ்சம் என்ற எண்ணத்தில் பலரும் உள்ளனர். ஆனால் அந்த மாதிரி தப்பு கணக்கு எல்லாம் போடாதீங்க விலை கூடுமே தவிர குறைவதற்கு வாய்ப்பு இல்லை என்று கோல்ட்மேன் சாக்ஸ் கணிப்புகள் தெரிவிக்கின்றன. சர்வதேச முதலீட்டு வங்கியான கோல்ட்மேன் சாக்ஸ், 2025ம் ஆண்டின் இறுதிக்கான தங்கத்தின் விலை கணிப்பை 3,300 டாலராக (அவுன்ஸ் ஒன்றுக்கு) உயர்த்தியுள்ளது.
முதலில், 3,100 டாலராக (அவுன்ஸ் ஒன்றுக்கு) கணித்து இருந்தது. எதிர்பார்த்ததை விட இடிஎஃப் திட்டங்களில் வலுவான முதலீடு மற்றும் உலக நாடுகளின் தேவை ஆகியவற்றால் தங்கத்தின் விலை குறித்த கணிப்பு மாற்றப்பட்டுள்ளதாக கோல்ட்மேன் சாக்ஸ் தெரிவித்துள்ளது.

உலக நாடுகளின் மைய வங்கிகள் மாதத்திற்கு சராசரியாக 70 டன் தங்கம் கொள்முதல் செய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. முதலில் மைய வங்கிகள் சராசாரியாக மாதந்தோறும் 50 டன் அளவுக்கே கொள்முதல் செய்ய வாய்ப்புள்ளது என்று கோல்ட்மேன் சாக்ஸ் கணித்து இருந்தது. அமெரிக்க வரி விதிப்பு கொள்கையை சுற்றியுள்ள அதிகரித்த நிச்சயமற்ற தன்மை, அடுத்த 3 முதல் 6 ஆண்டுகளுக்கு சீனா தங்கம் வாங்குவதில் மிக விரைவான வேகத்தை தொடரக்கூடும் என்ற எதிர்பார்ப்புகள் தங்கத்துக்கான தேவையை அதிகரித்து விலை உயர்வுக்கு வலு சேர்க்கும். இதுதவிர இந்த ஆண்டில் அமெரிக்க பெடரல் வங்கி இரண்டு முறையும், 2026ம் ஆண்டின் முதல் அரையாண்டில் ஒரு முறையும் வட்டி விகிதத்தை (தலா 0.25 சதவீதம்) குறைக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இது இடிஎஃப் வரவுகளுக்கான எங்கள் அடிப்படையை ஆதரிக்கிறது என்று கோல்ட்மேன் சாக்ஸ் தெரிவித்துள்ளது. முன்னதாக பேங்க் ஆஃப் அமெரிக்கா, அமெரிக்காவின் கொள்கையால் வரும் நிச்சயமற்ற தன்மை காரணம் காட்டி தங்கம் விலை குறித்த தனது மதிப்பீட்டை மாற்றியது குறிப்பிடத்தக்கது. பேங்க் ஆஃப் அமெரிக்கா, தற்போது தங்கத்தின் விலை 2025ம் ஆண்டில் சராசரியாக ஒரு அவுன்ஸ் விலை ரூ.3,063ஆகவும் 2026ம் ஆண்டில் ஒரு அவுன்ஸ் விலை 3,350ஆகவும் என்று எதிர்பார்க்கிறது. முதலில் இந்நிறுவனம் நடப்பு மற்றும் அடுத்த ஆண்டுக்கான தங்கத்தின் விலை முறையே 2.750 டாலர் மற்றும் 2,625 டாலராக கணித்து இருந்தது.
இந்த ஆண்டில் இதுவரையிலான காலத்தில் தங்கத்தின் விலை 15 சதவீதம் உயர்ந்துள்ளது. டிரம்பின் வரி கொள்கையால் வர்த்தக போர் வெடிக்கும் அபாயம், உலக நாடுகளின் மைய வங்கிகள் தங்கத்தை வாங்கி குவிப்பது, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எதிர்வரும் நாட்களில் தங்கத்தின் விலை உயரக்கூடும் என்று கணிப்புகள் வெளியாகி வருவது பொதுமக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!

தங்கம், வெள்ளி விலை : வரும் நாட்களிலும் விலை சரியுமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

அலர்ட்.. தங்கம் ரூ.7300,வெள்ளி ரூ.15000 சரிவு.. Big drop.. சொல்லி வைச்ச மாதிரியே நடக்குதே..!



Click it and Unblock the Notifications