பங்குச் சந்தையில் சரியான நேரத்தில் பங்குகளை வாங்குவது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் பங்கை எப்போது விற்பனை செய்வது என்பதும். ஏனென்றால் எதுவும் நிரந்தரமில்லை என்பது வாழ்க்கைக்கு மட்டுமல்ல பங்குச் சந்தைக்கும் பொருந்தும். நன்றாக விலை ஏறி கொண்டிருந்த ஒரு பங்கு திடீரென சரிவு காணவும் வாய்ப்புள்ளது. எனவே நாம் எதிர்பார்க்கும் லாபம் வந்தால் உடனே அந்த பங்கை விற்பனை செய்து விட்டு வெளியே வந்து விட வேண்டும். இந்த டெக்னிக்கை பெரிய முதலீட்டாளர்கள் சரியாக கடைப்பிடிப்பார்கள்.
உதாரணமாக கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் நேற்று ஸ்மால்கேப் பங்கான ஐஎஸ்ஜிஇசி ஹெவி என்ஜினீயரிங் பங்குகளை விற்பனை செய்ததை குறிப்பிடலாம். கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் ஒரு பன்னாட்டு முதலீட்டு வங்கி மற்றும் நிதி சேவைகள் வழங்கும் நிறுவனமாகும். 2024 டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி, என்ஜினீயரிங் தீர்வுகளை வழங்கும் ஐஎஸ்ஜிஇசி ஹெவி என்ஜினீயரிங் நிறுவனத்தில் 1.42 சதவீத பங்கு மூலதனம் அல்லது 10.43 லட்சம் பங்குகளை கோல்ட்மேன் சாக்ஸ் வைத்திருந்தது. சமீபகாலமாக ஐஎஸ்ஜிஇசி ஹெவி என்ஜினியரிங் பங்கின் செயல்பாடு திருப்தி அளிக்கும் விதத்தில் இல்லை. கடந்த ஓராண்டில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 5 சதவீதம் மட்டுமே ஆதாயம் கொடுத்துள்ளது.

மேலும் இந்த ஆண்டில் இதுவரையிலான காலத்தில் இப்பங்கின் விலை 35 சதவீதத்துக்கு மேல் சரிவு கண்டுள்ளது. ஒரு பங்கு அதன் விலையிலிருந்து 20 சதவீதத்துக்கு கீழ் குறைந்தால் அந்த பங்கு வீழ்ச்சி மண்டலத்தில் இருப்பதாக பொருள். இந்த சூழ்நிலையில், கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் நேற்று கைவசம் இருந்த ஐஎஸ்ஜிஇசி ஹெவி என்ஜினியரிங் பங்குகள் அனைத்தையும் விற்பனை செய்து விட்டது. பங்கு விலை தொடர்ந்து சரிந்ததால்தான் கோல்ட்மேன் சாக்சஸ் விற்பனை செய்ததாக தகவல். ப்ளாக்டீல் வாயிலாக ரூ.95 கோடிக்கு அனைத்து பங்குகளையும் விற்பனை செய்துள்ளது.
ஐஎஸ்ஜிஇசி ஹெவி என்ஜினியரிங் பங்கு விலை தொடர்ந்து குறைந்து வருவதை பார்த்து சரியான நேரத்தில் கோல்ட்மேன் சாக்ஸ் அந்நிறுவன பங்குகளை விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2024 டிசம்பர் 10ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே ஐஎஸ்ஜிஇசி ஹெவி என்ஜினியரிங் பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.1,677.25ஐ எட்டியது. அதன் பிறகு அந்நிறுவன பங்கின் விலை தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது.
Story written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications