தங்கம் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக பெரும் தடுமாற்றத்துடன் வர்த்தகம் செய்து வருகிறது. இதன் வாயிலாக பலரும் கலக்கத்தில் இருக்கும் வேளையில் கோல்ட்மேன் சாக்ஸ் முக்கியமான ஒரு விஷயத்தை கூறியுள்ளது, இது வெள்ளியில் முதலீடு செய்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் சர்வதேச ஸ்பாட் சந்தையில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 3933 டாலராக உள்ளது, வெள்ளி விலை 47 டாலராக உள்ளது. இந்திய ரீடைல் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 1,22,730 ரூபாயாக உள்ளது, வெள்ளி விலை கிலோவுக்கு 3000 ரூபாய் குறைந்து 1,65,000 ரூபாயாக உள்ளது.

உலகின் மிகப்பெரிய முதலீட்டு வங்கியான கோல்ட்மேன் சாக்ஸ், வெள்ளியை தங்கத்தை விட அதிக ஆபத்தில் உள்ள முதலீடு என்று அறிவித்துள்ளது. தங்கமும் வெள்ளியும் பொதுவாக ஒரே போக்கில் விலை நகரும் என்று நினைக்கப்படுவதுண்டு. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த உறவு மாறிவிட்டது.
மத்திய வங்கிகள் தங்கத்தை அதிகம் வாங்குவதால் தங்க விலை வேகமாக உயர்கிறது. ஆனால் வெள்ளியின் விலை அப்படியில்லை, வெள்ளி விலை தொழிற்சாலை பயன்பாட்டுக்கு ஏற்ப அதன் விலை உயர்ந்து வருகிறது. இதற்கு மத்தியில் சர்வதேச அரசியல் பதற்றம், முதலீட்டு சந்தை தடுமாற்றம், பொருளாதார ஏற்ற இறக்கத்தில் மத்தியில் சிக்கிக்கொள்கிறது.
கடந்த சில வருடங்களாக சோலார் பேனல்களிலும், எலக்ட்ரிக் வாகன பேட்டரிகளிலும் வெள்ளி அதிகம் பயன்படுவதால் அதன் தேவை அதிகரித்து விலையும் உயர்ந்து வருகிறது. ஆனால் தங்கத்திற்கு இணையான முக்கியதுவம் இன்னும் வெள்ளிக்கு வரவில்லை என்பதை உண்மை. இதனால் வெள்ளி பாதுகாப்பான முதலீடாக இல்லை என்று கோல்ட்மேன் சாக்ஸ் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மத்திய வங்கிகளின் ஆதரவு
மத்திய வங்கிகளின் நம்பிக்கையைப் தங்கம் மட்டுமே பெறுகிறது. உலக நாணய நிதியம் (IMF) தங்கத்தை ரிசர்வ் சொத்தாக அங்கீகரிக்கிறது. உலகின் அனைத்து மத்திய வங்கிகளும் தங்கத்தை பெருமளவு வைத்திருக்கின்றன. வெள்ளி அப்படி இல்லை. எந்த மத்திய வங்கியும் வெள்ளியை தங்கள் ரிசர்வில் அதிகளவில் வைப்பதில்லை.
தங்கத்திற்கு இணையாக விலை உயர்ந்தாலும் மத்திய வங்கிகள் வெள்ளிக்கு மாற மாட்டார்கள். ஏனெனில் மத்திய வங்கிகள் எடை அளவில் அல்லாமல், மதிப்பு அளவில் நிர்வகிக்கின்றனர். ஒரு பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கத்தை ஒரு சூட்கேஸில் வைக்க முடியும். அதே மதிப்பில் வெள்ளியை கொண்டு வர வேண்டுமெனில் ஒரு பெரிய சரக்கு லாரி தேவை.
தங்கத்தை நிர்வாகம் செய்யவும், லாக்கரில் சேமிக்கவும் எளிது ஆனால் வெள்ளி அப்படியில்லை. இதேபோல் வெள்ளி எப்போதும் ஒரு குறுகிய கால முதலீடாக மட்டுமே திகழும், தங்கத்தை போல் நீண்ட காலத்திற்கும் வைத்திருக்கும் சொத்தாக மத்திய வங்கிகளுக்கு இருக்காது.

வெள்ளி Vs தங்கம்
வெள்ளியின் உற்பத்தியில் 50 சதவீதத்திற்கு மேல் தொழிற்சாலைகளில் பயன்படுகிறது. சோலார் பேனல், மின்சார வாகனங்கள், 5ஜி உபகரணங்கள் ஆகியவற்றில் வெள்ளி முக்கிய பங்காற்றுகிறது. 2025இல் சூரிய மின்சக்தி தேவை அதிகரிப்பதால் வெள்ளி பயன்பாடு 232 மில்லியன் அவுன்ஸை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தேவை பொருளாதார வளர்ச்சியுடன் தொடர்புடையது. பொருளாதாரம் மந்தமானால் தொழிற்சாலை தேவை குறையும். தங்கம் அப்படி இல்லை. போர், பணவீக்கம், அரசியல் நிச்சயமற்ற தன்மை ஆகியவை தங்கத்தை உயர்த்தும். வெள்ளி அந்த பாதுகாப்பை இழக்கிறது.
சின்ன கல்லு பெத்த லாபம்
2025இல் வெள்ளி 70 சதவீதம் உயர்ந்தது, தங்கம் 50 சதவீதம். இதேவேளையில் வெள்ளியில் முதலீடு வருவது நின்றால் வெள்ளி பெரிய திருத்தத்தை சந்திக்கும் என்று கோல்ட்மேன் எச்சரிக்கிறது. தங்கம் வெள்ளியை விட விலையில் 9 மடங்கும், கனிம இருப்பில் பத்து மடங்கும் அரிது. ஒரு அவுன்ஸ் தங்கம் வெள்ளியை விட 80 மடங்கு மதிப்பு அதிக உடையது.
வெள்ளி நல்ல வர்த்தக சூழ்நிலையில் அதிக லாபம் தரும். மோசமான காலக்கட்டத்தில் அதிக இழப்பை சந்திக்கும். தங்கம் மத்திய வங்கி ஆதரவால் உயர்கிறது, வெள்ளி தொழிற்சாலை தேவையால் உயர்கிறது.
கோல்ட்மேன் சாக்ஸ் அறிக்கை முதலீட்டாளர்களுக்கு பெரிய எச்சரிக்கை. பொருளாதார நிச்சயமற்ற சூழ்நிலையில் மத்திய வங்கிகளுக்கும் பெரும் முதலீட்டாளர்களுக்கும் தங்கம் தான் உறுதியான தேர்வாக விளங்குகிறது. வெள்ளியை தேர்வு செய்பவர்கள் சந்தை அலையை கவனமாக கண்காணிக்க வேண்டிய நிலை உள்ளது, இதேபோல் சந்தை இயக்கத்திற்கு அதிக பாதிப்பை எதிர்கொள்ள கூடியது வெள்ளி.
More From GoodReturns

தங்கம் விலை எங்கோ போகப்போகுது!16,000 கிலோ தங்கத்தை சொந்தமாக வைத்திருக்கும் ஜாம்பவானின் கணிப்பு!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

கோயம்புத்தூர் தங்கம் விலை: தொழில் நகரத்தில் இன்று தங்கம் விலை உயர்ந்ததா ? குறைந்ததா?

கோயம்புத்தூர்: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. இனி தொடர்ந்து உயருமா..?

உக்கிரமடையும் ஈரான் போர்: தங்கம், வெள்ளி விலை எவ்வளவு வரை உயரும்? இப்போது நகை வாங்கலாமா வேண்டாமா?

தங்கம் விலை தடாலடியாக ரூ.6000 உயர்வு.. MCX சந்தையில் நடப்பது என்ன..?

பதறும் மத்திய கிழக்கு நாடுகள்.. எகிறும் தங்கம், வெள்ளி விலை! இனி என்னவாகும்?

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தங்கம், வெள்ளி.. ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்க தாக்குதலின் எதிரொலி..!!

தங்கம் விலை மதுரை: இன்று அதிரடி உயர்வு! நகைப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்த சர்வதேச காரணங்கள்..!

துபாயில் பொட்டி பொட்டியாக தேக்கமடைந்த தங்கம்!! இந்தியாவுக்கு கொண்டு வர முடியாமல் தவிக்கும் டீலர்கள்!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!



Click it and Unblock the Notifications