தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

சென்னையில் தொடர் சரிவில் இருந்த தங்கம் விலை இன்று தடாலடியாக உயர்வு கண்டுள்ளது. ஈரான் போர் தொடங்கியது முதலே சரிவடைந்து வந்த தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது.

சாமானிய மக்கள் அதிகமாக வாங்ககூடிய 22 கேரட் ஆபரண தங்கம் விலை நேற்றுடன் ஒப்பிடும் போது இன்று பெருமளவில் விலை உயர்ந்துள்ளது. நிதியாண்டின் முதல் நாளிலேயே தங்கம் விலை உயர்ந்துள்ளது மக்களுக்கு சற்றே கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து 13,670 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுவே இன்றைய தினம் ஒரு கிராமுக்கு 380 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது.

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 14,050 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. திங்கட்கிழமை தொடங்கி இன்று வரையிலான மூன்று வர்த்தக நாட்களில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இரண்டு நாட்கள் உயர்ந்தும் ஒரு நாட்கள் சரிவடைந்தும் காணப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்தை பொறுத்தவரை நேற்றைய தினம் 1,09,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது அதுவே இன்று ஒரே நாளில் 3000க்கும் மேல் விலை உயர்ந்து 1,10,000 ரூபாய் கடந்து 1,12,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் 3000 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்திருக்கிறது. 24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை சென்னையில் இன்று ஒரு கிராம் 15,327 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1,22,616 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 250 ரூபாய் விலை உயர்ந்து 11,710 ரூபாய்க்கும் ஒரு சவரன் 2000 ரூபாய் விலை உயர்வு கண்டு 93,680 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Also Read

சென்னையில் இன்று வெள்ளியின் விலை தடாலடியாக உயர்ந்திருக்கிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 15 ரூபாய் உயர்ந்து 265 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நேற்று 2.5 லட்சம் ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ வெள்ளி இன்று 2.65 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றுடன் ஒப்பிடும்போது வெள்ளி விலை இன்று ஒரு கிலோவுக்கு 15000 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது.

Recommended For You

ஈரான் போர் தொடங்கியதால் உலக அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து அமெரிக்க டாலர் வலுவடைந்தது இதன் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கம், வெள்ளியில் இருந்த பணத்தை எடுத்து கச்சா எண்ணெயிலும் அமெரிக்க டாலரிலும் முதலீடு செய்ய தொடங்கினர். தற்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டு மூன்று வாரங்களில் இந்த போரில் இருந்து அமெரிக்கா வெளியேறிவிடும் என அறிவித்திருக்கிறார். இதனால் பங்கு சந்தைகள் சற்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கி இருக்கின்றன. உலக சந்தையிலும் ஒரு சாதகமான சூழலே தென்படுவதால் முதலீட்டாளர்கள் மீண்டும் தங்கம் , வெள்ளி நோக்கி வருகை தர தொடங்கி இருக்கின்றனர்.

இதுவே விலை உயர்வதற்கு காரணமாக அமைந்திருக்கிறது ஈரான் போர் அமைதியை நோக்கி செல்லும் பட்சத்தில் இனிவரும் நாட்களிலும் அடுத்தடுத்து தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்வதை காண முடியும். எனவே தங்க நகை வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் இப்போதே வாங்கி கொள்வது தான் புத்திசாலித்தனம்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+