இந்தியாவில் தற்போது மருத்துவ காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு திட்டங்களுக்கான பிரீமியம் தொகைக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. ஏற்கனவே மருத்துவ காப்பீடுக்கான பிரீமியம் தொகையும் ஆயுள் காப்பீடுக்கான பிரீமியம் தொகையும் அதிகமாக இருப்பதால் மிடில் கிளாஸ் மக்கள் இவற்றை எடுப்பதற்கு தயங்குகிறார்கள். காப்பீடு திட்டங்கள் தங்களுக்கு கூடுதல் நிதி சுமையை ஏற்படுத்துவதாக கருதுகிறார்கள்.
காப்பீடு பிரீமியங்களுக்கு ஜிஎஸ்டி: இந்த நிலையில் அனைவரும் மருத்துவ காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு திட்டங்களை எடுக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு பிரீ தொகையை குறைத்தால் பெரும்பாலான மக்கள் அவற்றை வாங்க முன் வருவார்கள், அந்த வகையில் மருத்துவ காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு திட்டங்களுக்கு தற்போது விதிக்கப்படும் 18 சதவீத ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் அல்லது முழுவதுமாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது.

அமைச்சர்கள் குழு ஆய்வு: இதனை அடுத்து ஜிஎஸ்டி கவுன்சில் சார்பாக இந்தியாவில் மருத்துவ காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு பிரீமியங்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து ஆய்வு செய்ய பீகார் துணை முதலமைச்சர் சாம்ராட் சௌத்ரி தலைமையில் அமைச்சர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழுவின் ஆலோசனை கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் கலந்து கொண்டு பேசினார் .
நிர்மலா சீதாராமன் பங்கேற்பு: மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி சீர்திருத்த பரிந்துரை குறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் எடுத்துரைத்தார். பின்னர் மருத்துவ காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு பிரீமியம் தொகைகள் மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி குறித்து அமைச்சர்கள் குழுவினர் ஆலோசனை நடத்தினர். இதில் மருத்துவ காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு திட்டங்களுக்கான பிரீமியம் தொகை மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை முழுவதுமாக நீக்கலாம் என அனைவரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர்.

ஜிஎஸ்டி வரியை நீக்க ஒப்புதல்: மருத்துவ காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு திட்டங்கள் மீதான ஜிஎஸ்டி வரி முழுவதுமாக நீக்குவது மூலம் அரசுக்கு 9700 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என கணக்கிடப்பட்டிருக்கிறது. இந்த அமைச்சர்கள் குழு இந்த முடிவினை எடுத்திருக்கும் நிலையில் அடுத்த கட்டமாக இது ஜிஎஸ்டி கவுன்சில் ஆய்வுக்கு செல்லும். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் அடுத்த மாதம் நடைபெறும் நிலையில் அவர்கள் இதனை ஆய்வு செய்து ஒப்புதல் அளித்தால் இந்தியாவில் மருத்துவ காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு திட்டங்களுக்கு விதிக்கப்பட பிரீமியம் தொகைக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி முழுவதுமாக நீக்கப்படும்.
நமக்கு எவ்வளவு சேமிப்பு: இவ்வாறு ஜிஎஸ்டி வரி நீக்கப்பட்டால் நமக்கு பிரீமியம் தொகையில் எவ்வளவு சேமிக்க முடியும் என்பதை தெரிந்து கொள்ளலாம். தற்போது ஒரு மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு ஒரு ஆண்டுக்கு 25 ,000 ரூபாய் கட்டணமாக செலுத்துகிறோம் என்றால் அதில் தற்போது 18 சதவீதம் ஜிஎஸ்டி தொகையாக 4,500 ரூபாயை நாம் கூடுதலாக செலுத்துகிறோம். ஜிஎஸ்டி வரி நீக்கப்பட்டால் நாம் செலுத்தக்கூடிய பிரீமியம் தொகையில் 4500 ரூபாயை சேமிக்க முடியும் . சராசரியாக பார்க்கும்போது ஒவ்வொரு குடும்பத்திற்கும் காப்பீடு திட்டங்களுக்கான பிரீமியம் தொகையில் 3,000 முதல் 9,000 ரூபாய் வரை ஒரு ஆண்டுக்கு சேமிக்க முடியும்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications