DAP விவசாய உரத்திற்கு மானியம் 140% அதிகரிப்பு.. விவசாயிகள் மகிழ்ச்சி..!

கொரோனா தொற்றுக் காலத்தில் பாதிப்பும் இல்லாமல் இயங்கும் மிகவும் சில துறைகளில் விவசாயம் முக்கியமானதாக உள்ள நிலையில் மோடி தலைமையிலான அரசு விவசாயிகளுக்கு ஏதுவான சூழ்நிலையை அமைத்துக் கொடுக்கும் வகையிலும், பரிசு அளிக்கும் விதமாகவும் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு
டை அமோனியம் பாஸ்பேட் (DAP) விவசாய உரத்திற்கு அளிக்கும் மானியத்தை 140 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதன் மூலம் விவசாயிகளுக்கு இதுநாள் வரையில் ஒரு மூட்டை உரத்திற்கு வெறும் 500 ரூபாய் மட்டுமே கிடைத்த நிலையில் இனி 1200 ரூபாய் வரையிலான மானியம் பெற முடியும்.

 

 சர்வதேச சந்தை விலை

சர்வதேச சந்தை விலை

பாஸ்பரிக் ஆசிட் மற்றும் ஆமோனியாவின் விலை சர்வதேச அளவில் உயர்ந்துள்ள சூழ்நிலையில் இந்தியாவில் விவசாய உரங்களின் விலை அதிகரித்துள்ளது. இதன் இந்தப் பிரச்சனையைச் சமாளிப்பது குறித்து மோடி தலைமையில் நடந்த ஒரு முக்கியமான கூட்டத்தில் மானியத்தின் அளவை உயர்த்துவது குறித்து முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

 இந்திய விவசாயிகள்

இந்திய விவசாயிகள்

இந்தக் கூட்டத்தின் முடிவில் பிரதமர் மோடி மானியத்தின் அளவை உயர்த்தியதன் மூலம் இந்தியாவில் விவசாயிகள் பழைய விலையிலேயே உரத்தைப் பெற முடியும். இதனால் விவசாயிகளுக்குக் கூடுதலான பாதிப்புகள் எதுவும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

 டை அமோனியம் பாஸ்பேட் (DAP)

டை அமோனியம் பாஸ்பேட் (DAP)

கடந்த வருடம் டை அமோனியம் பாஸ்பேட் (DAP) விவசாய உரத்தின் விலை 1700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் மத்திய அரசு இதற்கு 500 ரூபாய் மானியம் வழங்கி விவசாயிகள் கைகளில் 1200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

 விவசாய உரத்தின்

விவசாய உரத்தின்

ஆனால் சமீபத்தில் சர்வதேச நாடுகளில் விலை உயர்வின் காரணமாக டை அமோனியம் பாஸ்பேட் (DAP) விவசாய உரத்தின் விலை 60 முதல் 70 சதவீதம் வரையில் உயர்ந்தது, இதன் மூலம் ஒரு மூட்டை உரத்தின் விலை 2400 ரூபாய் வரையில் உயர்த்தது.

 1200 ரூபாய் மானியம்

1200 ரூபாய் மானியம்

டை அமோனியம் பாஸ்பேட் (DAP) விவசாய உரத்தின் 2400 ரூபாய்க்கு உயர்ந்து விவசாயிகள் 500 ரூபாய் மானியத்துடன் 1900 ரூபாய்க்கு வாங்கி வந்த நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள புதிய மானியத்தின் மூலம் விவசாயிகள் பழைய படி 1200 ரூபாய்க்குப் பெற முடியும்.

 80,000 கோடி ரூபாய் மானியம்

80,000 கோடி ரூபாய் மானியம்

மத்திய அரசு விவசாய உரங்களுக்கு அளிக்கப்படும் மானியத்திற்கு மட்டும் வருடத்திற்கு 80,000 கோடி ரூபாய் அளவிலான தொகையைச் செலவு செய்து வரும் நிலையில், இப்புதிய மாற்றத்தின் மூலம் கூடுதலாக 14,775 கோடி ரூபாய்ச் செலவாகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+