ஜனவரி 1 முதல் பல்வேறு விதமான மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளது. அதில் ஜவுளி பொருட்கள் மீதான ஜிஎஸ்டி விகிதமானது 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக அதிகரிக்கலாம் என முன்னதாக அறிவிக்கப்பட்டது.
எனினும் ஜிஎஸ்டி கவுன்சிலின் இந்த வரி அதிகரிப்பானது இத்துறையினர் மத்தியில், பெரும் கவலையை ஏற்படுத்தியது.
இதனால் ஜனவரி 1க்கு மேல் துணிகள் விலையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இது ஜவுளித் துறையினர் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியிருந்தது.
ஒத்தி வைப்பு
இந்த நிலையில் பெரும் நிம்மதி அளிக்கும் விதமாக தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இது அடுத்து வரும் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 1ல் இருந்து 5% ஆக இருக்கும் 12% ஆக ஜிஎஸ்டி விகிதம் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இது ஜவுளித் துறையில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆதரவு இல்லை
டிசம்பர் 30 அன்று, பல மாநிலங்கள் ஜனவரி 1 முதல் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ள, ஜவுளித் துறை மீதான ஜிஎஸ்டி அதிகரிப்பினை சுட்டிக் காட்டின. இதனை நிறுத்தி வைக்க கோரிக்கை விடுத்தன. மத்திய பட்ஜெட்டுக்கு முன்னதாக நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில், குஜராத், மேற்கு வங்கம், டெல்லி, ராஜஸ்தான் மற்றும் தமிழ் நாடு உள்ளிட்ட மாநிலங்கள் ஆதரவளிக்கவில்லை.
டெல்லி அரசு ஆதரவு
ஜிஎஸ்டி அதிகரிப்புக்கு எதிராக வணிகர்கள் போராட்டம் நடத்திய நிலையில், டெல்லி அரசும் இதற்கு ஆதரவு அளித்தது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த பிரச்சனையை எழுப்புவோம் என்றும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சில தினங்களுக்கு முன்பாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
இப்படி பல்வேறு கருத்துகளுக்கு மத்தியில் தான், 46-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று டெல்லியில் மத்திய நிதியமைச்சர் தலைமையில் நடந்தது. இதில் அனைத்து மாநில நிதி அமைச்சகர்களும் பங்கேற்றுள்ளனர்.
ஏற்கனவே 5% ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு போன்ற நடவடிக்கைகள் காரணமாக ஜவுளித் துறை நலிந்து போயுள்ளது. இதற்கிடையில் இது 12% ஆக அதிகரிக்கப்பட்டால் இன்னும் இத்துறையானது பின்னடைவை சந்திக்கலாம்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications