சமீபகாலமாக மஞ்சள் உலோகமான தங்கத்தின் விலை இன்று எவ்வளவு உயருமோ என்று அச்சப்படும் அளவுக்கு அதன் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ரஷ்யா-உக்ரைன் போர், இஸ்ரேல்-ஹமாஸ் தாக்குதல், புவிசார் அரசியல் பதட்டங்கள், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பால் வர்த்தக போர் வெடிக்கும் அபாயம் போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.
தங்கத்தின் விலை அதிகமாக உள்ளதால், மக்கள் தங்கம் வாங்குவது குறைந்து வருகிறது. இதனால் நகை கடைகள் காற்று வாங்குகின்றன.தங்கம் விலை குறைந்ததால்தான் விற்பனை சூடு பிடிக்கும் என்று வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

ஆனால் தங்கத்தின் விலை குறைவதற்கான அறிகுறிகள தற்சமயம் தென்படவில்லை. டிரம்பின் பரஸ்பர வரி திட்டம் பணவீக்கத்தை தூண்டும் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் அமெரிக்கர்கள் அஞ்சுவதால், சந்தை பங்கேற்பாளர்கள் நிலைகளை சமன் செய்ததால் சர்வதேச சந்தையில் இன்று தங்கத்தின் விலை நிலையாக இருந்தது.
மார்ச் மாதத்தில் அமெரிக்க நுகர்வோர் நம்பிக்கை 4 ஆண்டுகளுக்கும் மேல் இல்லாத அளவுக்கு மிக குறைந்த அளவுக்கு சரிந்தது. அமெரிக்காவில் எதிர்காலத்தில் மந்தநிலை ஏற்படும் என்றும், டிரம்பின் வரி விதிப்பால் அதிக பணவீக்கம் ஏற்படும் என்றும் அந்நாட்டு குடும்பங்கள் பயத்தில் உள்ளன.
ஏப்ரல் 2ம் தேதி அமெரிக்க நிர்வாகம் செயல்படுத்த இருக்கும் பரஸ்பர வரி குறித்து இப்போது கவனம் செலுத்தப்படுகிறது. இது சந்தையில் சிறிது பதட்டத்தை ஏற்படுத்துகிறது. ஏனென்றால் டிரம்பின் வரி கொள்கைகள் பணவீக்கத்தை அதிகரிக்கும், பொருளாதார வளர்ச்சியை மெதுவாக்கும் மற்றும் வர்த்தக பதட்டங்களை தீவிரப்படுத்தும்.
பாரம்பரியமாக புவிசார் அரசியல் மற்றும் பொருளதார நிச்சயமற்ற தன்மைகளுக்கு எதிரான ஒரு பாதுகாப்பான முதலீடாக தங்கம் கருதப்படுகிறது. இந்த ஆண்டில் இதுவரை தங்கத்தின் விலை 15 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் 20ம் தேதியன்று தங்கத்தின் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியது. அன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் ஸ்பாட் விலை 3,057.21ஆக இருந்தது.
வரும் வெள்ளிக்கிழமையன்று அமெரிக்க தனிநபர் நுகர்வு செலவினம் தொடர்பான தரவு வெளியாக உள்ளது. இந்த தரவுகளை பொறுத்து அமெரிக்க பெடரல் வங்கியின் அடுத்த நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் வெளியாகும். அடுத்த வாரம் பரஸ்பர வரி அமலுக்கு வர உள்ளதால், அது தங்கத்தின் விலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று, அமெரிக்கா கடல் மற்றும் எரிசக்தி இலக்குகளுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்த உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே ஒப்பந்தங்களை எட்டியது.
மேலும் அதற்கு பலனாக, ரஷ்யாவுக்கு எதிரான சில தடைகளை நீக்குவதற்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டது. இந்த விஷயத்தில் எதுவும் நேர்மறையான முடிவுகள் கிடைத்தால் அதுவும் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை என்ன? நகை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை

கோயம்புத்தூரில் தங்கம் விலை அதிரடி உயர்வு.. இனி தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

மதுரை மக்களே.. தங்கம் விலை குறைந்தது.. உடனே நகை கடைக்கு கிளம்புங்க..!!

தங்க குழந்தையாக மாறிய சஞ்சு சாம்சன் – இது தான் 'கன்வெக்ஸ்' வெற்றியா? காத்திருந்து கிடைத்த பெரும் லாபம்!

தங்கம் விலை எங்கோ போகப்போகுது!16,000 கிலோ தங்கத்தை சொந்தமாக வைத்திருக்கும் ஜாம்பவானின் கணிப்பு!

Madurai Gold Rate Today: ரூ.655 சரிவு – அடுத்த பெரிய உயர்வுக்கு முன் வாங்கலாமா?

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!



Click it and Unblock the Notifications