சென்னை: 2024-ம் ஆண்டு முதலீட்டாளர்களுக்கு எந்த துறையில் அதிக லாபம் கிடைத்தது என்ற கேள்விக்கு, தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தில் நடத்திய கருத்துக்கணிப்பு பல முக்கியமான தகவல்களை வெளியிட்டுள்ளது.
பொதுவாக மக்கள் தங்கம், நிலம் போன்றவற்றில் முதலீடு செய்தால் மட்டுமே அதிக லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலை மாறியுள்ளது என்பது இந்த கருத்து கணிப்பு மூலம் தெரிய வந்துள்ளது. கருத்துக்கணிப்பின் முக்கிய முடிவுகள்:

பங்குச்சந்தை முதலிடம்: மொத்தம் 347 வாக்குகளுடன், பங்குச்சந்தை முதலீடு இந்த ஆண்டு அதிக லாபத்தைத் தந்த முதலீடாகத் திகழ்கிறது. இது, 2024-ம் ஆண்டு இந்திய பங்குச்சந்தை சிறப்பாக செயல்பட்டதைக் காட்டுகிறது.
தங்கம், வெள்ளி இரண்டாம் இடம்: 211 வாக்குகளுடன், தங்கம் மற்றும் வெள்ளி முதலீடு இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. உலகளாவிய பொருளாதார அச்சுறுத்தல்கள் மற்றும் பணவீக்கம் அதிகரிப்பு போன்ற காரணங்களால், தங்கம் மற்றும் வெள்ளி பாதுகாப்பான முதலீட்டுத் திட்டமாகக் கருதப்படுகிறது.
உடல் நலம், மன நலம் முக்கியத்துவம்: ஆச்சரியமாக, "என்னுடைய உடல் நலம் / மன நலம்" என்ற விருப்பத்தை 151 பேர் தேர்ந்தெடுத்துள்ளனர். இது, மக்கள் தங்கள் உடல் நலம் மற்றும் மன நலத்தில் முதலீடு செய்வதன் மூலம் நீண்ட காலத்தில் பெரும் லாபத்தைப் பெற முடியும் என்ற நம்பிக்கையில் இருப்பதைக் காட்டுகிறது.
ரியல் எஸ்டேட்: ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்த 119 பேர், இந்த ஆண்டு நல்ல லாபத்தைப் பெற்றதாகக் கூறியுள்ளனர்.
வங்கி வைப்பு நிதி / அரசு சேமிப்பு திட்டங்கள்: குறைந்த அபாத்து காரணிகள் கொண்ட முதலீடுகளான வங்கி வைப்பு நிதி மற்றும் அரசு சேமிப்பு திட்டங்களை தேர்ந்தெடுத்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது.
இந்த கருத்துக்கணிப்பின் முடிவுகள், முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை பல்வேறு துறைகளில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர் என்பது மட்டும் அல்லாமல் அதிகப்படியான தொகையை பங்குச்சந்தையில் முதலீடு செய்வதையும் காட்டுகிறது. பங்குச்சந்தை, தங்கம், நிலம் போன்ற பாரம்பரிய முதலீட்டுத் திட்டங்களுடன், தற்போது உடல் நலம் மற்றும் மன நலத்திலும் முதலீடு செய்வது ஒரு புதிய போக்காக உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications