9 மாநிலங்களின் ஜிஎஸ்டி நிலுவை ரூ.70,000 கோடியாக இருக்கலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ஒன்பது முக்கிய மாநிலங்களின் ஜிஎஸ்டி நிலுவைத் தொகையானது 70,000 கோடி ரூபாயாக இருக்கலாம் என்றும் மதிப்பீட்டு நிறுவனமான இக்ரா ரேட்டிங்ஸ் மதிப்பிட்டுள்ளது.

மத்திய அரசு வழங்காமல் வைத்திருக்கும் ஜிஎஸ்டி நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்றும் மாநில அரசுகள் கூறி வரும் நிலையில், இக்ரா இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

9 மாநிலங்களின் ஜிஎஸ்டி நிலுவை ரூ.70,000 கோடியாக இருக்கலாம்..!

நாடு முழுவதும் ஒரே வரி, ஒரே நாடு என்பதற்கு ஏற்ப மத்திய அரசு கடந்த 2017ம் ஆண்டில் ஜூலை 1ம் தேதியன்று ஜிஎஸ்டி என்ற பெயரில் அமல்படுத்தப்பட்டது. இந்த ஜிஎஸ்டி வரியானது நான்கு அடுக்குகளின் கீழ் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் ஏற்கனவே கார்ப்பரேட் வரி விகித குறைப்பாலும் மற்ற நடவடிக்கைகளாலும் நிதிஅழுத்தத்தில் உள்ள மத்திய அரசுக்கு, இந்த ஜிஎஸ்டி நிலுவை தொகையானது மேலும் பிரசனையை கொண்டு வரும் என்றும் கருதப்படுகிறது.

எதிர்பார்த்ததை விட குறைவான ஜிஎஸ்டி வசூலை கருத்தில் கொண்டு, இக்ரா நடப்பு நிதியாண்டில் வருவாயில் 3.5 லட்சம் கோடி ரூபாய் பற்றாக்குறை இருக்கும் என்றும் மத்திய அரசு மதிப்பிட்டுள்ளது. இதே 2020ம் நிதியாண்டில் அனைத்து மாநிலங்களுக்கான மொத்த வருவாயில் பற்றாக்குறை 2.2 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட நிதி இழப்புக்கு தங்களுக்கு தர வேண்டிய இழப்பீடு நிலுவைத் தொகையை மாநிலங்கள் மத்திய அரசிடம் கேட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த 2020ம் நிதியாண்டில் ஒன்பது மாநிலங்கள் கேட்கும் இழப்பீடு தொகை இரட்டிப்பாகி உள்ளது. அதாவது 60,000 - 70,000 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளன.

கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, குஜராத், மேற்குவங்கம், மகாராஷ்டிரா, பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களின் இழப்பீடு தொகை 2020ம் நிதியாண்டில் இரட்டிப்பாகி 60,000 கோடி ரூபாய் முதல் 70,000 கோடி ரூபாய் வரையில் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொகையை மாநிலங்களுக்கு வழங்கும் போது, மத்திய அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்படும் என்ற நிலை உருவாகியுள்ளது.

இந்த நிதியை வழங்கவில்லை எனில் மாநிலங்களில் நிதி நெருக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக மாநிலங்களின் வருவாய் குறையம் போது, நலத்திட்டங்கள் மற்றும் வெள்ள நிவாரணம் மற்றும் சம்பளங்களுக்கான கூடுதல் வெளியீட்டில் உள்ள பல அபாயங்களை குறிக்கிறது. மேலும் ஏற்கனவே கடன் பிரச்சனையில் உள்ள மாநில அரசுகள், இந்த வருவாய் குறைவால் மேலும் சிக்கல்களை சந்திக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் மாநில அரசுகளுக்கும் நிதிப்பற்றாக்குறை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: gst ஜிஎஸ்டி
English summary

Goods and service Tax compensation to nine states put in Rs.70,000 crore

Nine major states require Rs.70,000 crore GST compensation from centre in FY 2020. There is in twice as high as the compensation they received in FY 2019.
Story first published: Friday, December 20, 2019, 19:30 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X