இந்தியாவில் 2வது கொரோனா அலையின் வீரியம் குறைந்து 3வது அலை வர உள்ளதாகக் கணிப்புகள் வெளியாகி வரும் வேளையில் இந்திய மக்களுக்கு உதவும் வகையில் உலகின் மிகப்பெரிய டெக் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனமான கூகுள் தனது இந்திய கிளையின் மூலம் நாட்டில் சுமார் 80 ஆக்சிஜன் உற்பத்தி தளத்தை அமைக்கப் புதிதாக 15 மில்லியன் டாலர் அளவிலான தொகையை அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
கூகுள் இந்தியா 80 ஆக்சிஜன் உற்பத்தி தளத்தை நேரடியாக அமைக்கவில்லை, தற்போது அறிவித்துள்ள நன்கொடை தொகையை இரு NGO-க்கு அளித்து அதன் மூலம் இப்பணிகளைச் செய்ய முடிவு செய்துள்ளது. கூகுள் நிறுவனம் பிரதமர் நிவாரணக் கணக்கிற்கு நிதி அளிக்காமல் NGO வாயிலாக உதவி செய்கிறது.

கூகுள் இந்தியா நிறுவனத்தின் இத்திட்டத்தைக் கிவ்இந்தியா மற்றும் பாத் ஆகிய இரு அமைப்புகள் வாயிலாகப் பொருட்களை வாங்குவதிலிருந்து குறிப்பிட்ட இடத்தில் நிறுவும் பணிகள் முதல் இந்த இரு அமைப்புகள் தான் செய்ய உள்ளது.
பாத் அமைப்பு இந்தியாவில் எந்த இடத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது, எங்கு அமைக்க வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்து மொத்த திட்டத்திற்கும் பணிகளை வடிவமைப்புகள் செய்ய உள்ளது. இதுமட்டும் அல்லாமல் இப்பணிகளுக்காக மாநில அரசுகள் மற்றும் அரசு அமைப்புகளிடம் அனுமதிப் பெற்று ஆக்சிஜன் பிளாட் அமைக்க உள்ளது.
இதோடு ARNMAN அமைப்புக்கு சுமார் 3.6 கோடி ரூபாய் அளவிலான நிதியுதவி உடன் 1.8 லட்சம் சமுக ஆர்வலர்கள் மற்றும் 40000 சுகாதாரத் துறை ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications