விண்வெளி ஆராய்ச்சி மற்றும் பயணங்கள் துறையில் ஒரு தனியார் நிறுவனமாக அரசின் உதவிகள் எதுவும் இல்லாமல் மிகப்பெரிய புரட்சியைச் செய்துள்ள எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ் எக்ஸ் அடுத்தடுத்து நேற்று தனது ஸ்டார்ஷிப் ராக்கெட்-ஐ 5வது கட்ட உயரத்தில் சோதனை செய்து வெற்றி கண்டு உள்ளது.
இந்த நிலையில் நாசாவின் நிலவுக்கு செல்லும் பயணத் திட்டத்தை மொத்தமாகக் கைப்பற்றியுள்ள ஸ்பேஸ் எக்ஸ், தற்போது உலகின் முன்னணி டெக் நிறுவனமான கூகுள் உடன் ஒரு முக்கியமான திட்டத்திற்காக இணைந்துள்ளது.
எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ்எக்ஸ்
எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் விண்வெளி பயணங்கள் மட்டும் அல்லாமல் செயற்கைக்கோள் வாயிலான இண்டர்நெட் சேவை திட்டமான ஸ்டார்லிங்க்-ஐ இயக்கி வருவது அனைவருக்கும் தெரியும். இந்த அதிவேக இண்டர்நெட் சேவையைக் கூகுள் பயன்படுத்தத் திட்டமிட்டு ஸ்பேஸ்எக்ஸ் உடன் கூட்டணி சேர்ந்துள்ளது.
கூகுள் கிளவுட்
கூகுள் நிறுவனத்தில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் பிரிவான கூகுள் கிளவுட் சேவையை மேம்படுத்தும் விதமான டேட்டா டெலிவரி, கிளவுட் சேவை, நிறுவனங்களுக்கான சேவை ஆகியவற்றை மேம்படுத்த ஸ்பேஸ்எக்ஸ்-ன் ஸ்டார்லிங்க் சேவை உடன் இணைந்துள்ளது.
கூகுள் டேட்டா சென்டர்
இக்கூட்டணியின் கீழ் கூகுள் டேட்டா சென்டர் இருக்கும் அனைத்து இடங்களிலும் ஸ்டார்லிங்க் தனது கிரவுட் ஸ்டேஷனை அமைக்க உள்ளது. ஸ்டார்லிங்க் தற்போது 1,500 செயற்கைகோள் வாயிலாக அதிவேக இண்டர்நெட் சேவையை அளித்து வரும் நிலையில் உலகம் முழுவதும் இருக்கும் பெரு நிறுவனங்களுக்கு ஸ்டார்லிங்க் - கிளவுட் சேவை வாயிலாகச் சிறு கிராமம் வரையில் சேவை அளிக்க முடியும்.
கூகுளின் முடிவு
மேலும் ஸ்டார்லிங்க் சேவை தொடர்ந்து விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில், கூடிய விரைவில் கூகுள் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிவேக டேட்டா டெலிவரியை உலகம் முழுவதும் அளிக்க முடியும், குறிப்பாகக் காடு, மலை, கிராமம், போன்ற பகுதிகளுக்கும் அளிக்க முடியும் என நம்புகிறது கூகுள்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications