சென்னை: மோசடி செய்ய பயன்படுத்தப்படும் மொபைல் இணைப்புகளைத் தடுக்க இந்திய அரசாங்கம் தேசிய அளவிலான ஒரு முயற்சியைத் தொடங்கியுள்ளது. எக்கனாமிக் டைம்ஸ் அறிக்கையின்படி தொலைத்தொடர்பு ஆப்பரேட்டர்கள், மோசடி சம்பவங்களில் ஈடுபட்ட சுமார் 1.8 மில்லியன் மொபைல் இணைப்புகளை நிறுத்த இருக்கின்றனர். இதன் மூலம் மோசடிகள் தடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொபைல் இணைப்புகளைத் தவாறாகப் பயன்படுத்தி மக்களின் பணத்தை அபகரித்து சைபர் கிரைம் மோசடிகளில் ஈடுபடுவதை முழுமையாக நிறுத்தும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக ஆன்லைன் மோசடிகள் தான் அதிகரித்துள்ளன. எங்கோ ஒரு இடத்தில் இருந்தாலும் மக்களின் பணத்தை அபகரிக்கும் விதமாக பல பல ட்ரிக்கை பயன்படுத்தி ஆன்லைனில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். அதற்காக அவர்கள் பயன்படுத்திய மொபைல் இணைப்புகள் தற்போது முடக்கப்பட உள்ளன.

மே 9ஆம் தேதி அன்று தொலைத்தொடர்புத்துறை (DoT) சுமார் 28,220 மொபைல் இணைப்பை துண்டிக்கவும், இந்த ஃபோன்களுடன் தவறாகப் பயன்படுத்தப்பட்ட இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மொபைல் இணைப்புகளை மறுபரிசீலனை செய்யுமாறு டெலிகாம் ஆப்ரேட்டர்களிடம் கேட்டுக் கொண்டது. மேலும் அடுத்த 15 நாட்களில் டெலிகாம் ஆப்ரேட்டர்கள் மூலம் சரிபார்ப்பு முடிந்த பிறகு இந்த இணைப்புகள் துண்டிக்கப்படும்.
2023 ஆம் ஆண்டில் மட்டும் டிஜிட்டல் திருட்டில் பாதிக்கப்பட்டவர்கள் ₹ 10,319 கோடியை இழந்ததாக தேசிய சைபர் கிரைம் அறிக்கை போர்டல் (NCRP) மதிப்பிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் 6,94,000 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
நீங்கள் அல்லது உங்களுக்கு தெரிந்த நபர் சைபர் கிரைம் மோசடியில் பாதிக்கப்பட்டிருந்தால், ஆன்லைனில் புகார் அளிக்கலாம். நேஷனல் சைபர் கிரைம் ரிப்போர்ட்டிங் போர்டல் என்பது இந்திய அரசாங்கத்தின் ஒரு முன்முயற்சியாலும். இதில் இணைய மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள், தங்களது புகார்களை ஆன்லைனில் தெரிவிக்கலாம்.
இது போன்ற முயற்சிகளை தொடர்ந்து அரசு எடுத்து வருவதால், இனி வரும் நாட்களில் ஆன்லைன் மோசடிகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்க முயற்சிகள் ஒரு பக்கம் இருந்தாலும், மக்களும் தங்களுடைய ஆன்லைன் நண்பர்கள், ஆள் பெயர் தெரியாதவர்கள் போன்றவர்களிடம் பேசும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பெரும்பாலான மோசடிக்கு காரணம் வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் தெரியாத ஏதோ ஒரு திட்டத்தில், தெரியாத நபர்கள் மூலம் முதலீடு செய்வதுதான். இவற்றை தவிர்த்தாலே ஆன்லைன் மோசடிகள் 50 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது என்பதே பல பேரின் கருத்தாக உள்ளது. அரசு முன் முயற்சிகளை எடுப்பதற்கு முன்பு நாமே விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது தானே!
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications