டெல்லி: நாட்டில் படு வேகமாக பரவி வரும் கொரோனா தாக்கத்தினால் லாக்டவுன் மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொழில் துறைகள், நிறுவனங்கள் அரசு அலுவலகங்கள், அரசு அலுவலகங்கள் என அனைத்து மூடப்பட்டுள்ளன.
இதற்கிடையில் ஏற்கனவே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடுமையான கட்டுபாடுகளும் விதிகப்பட்டுள்ள நிலையில், ஜிஎஸ்டி தாக்கலுக்கு ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 மாதங்களாக லாக்டவுன் காரணமாக தொழில் நிறுவனங்கள் கடும் நஷ்டத்தினை சந்தித்து வருகின்றன. இதற்கிடையில் அரசும் நடப்பு நிலவரங்களை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. வருமான வரி, ஜிஎஸ்டி தாக்கல் உள்ளிட்டவற்றில் சலுகை அளிக்கப்படும் எனவும் கடந்த மார்ச் மாத இறுதியில் தெரிவித்தார். அதுமட்டும் அல்ல அப்போது தொழில் துறையினரின் கருத்துகளை கேட்டறிந்து வருகிறோம்.
ஆக கடந்த 2018 - 19 நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல், ஜிஎஸ்டி தாக்கலுக்கும் ஜூன் 30 வரை அவகாசம் அளிக்கப்படும். காலதாமதமாக தாக்கல் செய்யப்படும் கணக்கிற்கு விதிக்கப்படும் அபராதம் 12 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக குறைக்கப்படும் என்றும் அப்போது கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது 2018 - 2019ம் நிதியாண்டிற்கான ஜிஎஸ்டி தாக்கல் செய்ய செப்டம்பர் இறுதி வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. அதே போல 2018 - 19 நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கலும் செப்டம்பர் வரை நீட்டிப்பதாக மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.
லாக்டவுனால் நாட்டில் பெரும்பகுதியில் பூட்டப்பட்டிருந்தால் ஜூன் 30க்குள் காலகெடுவை பூர்த்தி செய்வது எளிதானது அல்ல. ஆனால் தற்போது அதனை நீட்டித்திருப்பது ஒரு நல்ல விஷயம் தான். இது தொழில் துறைக்கு சற்று நிவாரணத்தினை அளிக்கும் என்றும் தொழில்துறையை சார்ந்தவர்கள் மத்தியில் கூறப்படுகிறது. மேலும் இது அரசாங்கத்தின் நிலைபாட்டினை நிரூபிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி கீழ் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்குப் பொருட்களை எடுத்துச் செல்லும் போது மின்னணு முறையில் இ-வே பில் பெற்று வரப்படுகிறது. அப்படிப்பட்ட இந்த பில்களை அதாவது மார்ச் 24 அல்லது அதற்கு முன்னர் உருவாக்கப்பட்ட பில்களுக்கும் ஏப்ரல் 15வுடன் கால அவகாசத்தினை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் லாக்டவுன் மே 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications