அட்சய திருதியை நெருங்கும் வேளையில் இந்திய வங்கிகள் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதியை திடீரென நிறுத்தி வைத்திருப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்வாறு தங்கம், வெள்ளி இறக்குமதி நிறுத்தப்பட்டு இருப்பதால் உள்நாட்டில் டிமாண்ட் அதிகரித்து, சப்ளை குறைந்து தங்கம் , வெள்ளி விலை உயர்வதற்கு வாய்ப்பினை ஏற்படுத்தும் என்ற அச்சம் எழுந்த நிலையில் மத்திய அரசு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இந்தியாவிற்கு தேவையான தங்கம் மற்றும் வெள்ளியில் பெரும்பகுதியை நாம் வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்கிறோம். பொதுவாக இந்தியாவில் செயல்படக்கூடிய வங்கிகள் வெளிநாடுகளில் இருந்து தங்கம், வெள்ளியை கொள்முதல் செய்யும். ஆனால் தற்போது அவை நிறுத்தி வைத்திருக்கின்றன என ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டது. மத்திய வர்த்தகத் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படக்கூடிய , DGFT எனப்படும் வெளிநாட்டு வர்த்தகத்திற்கான பொது இயக்குனரகம் ஒவ்வொரு நிதி ஆண்டு தொடக்கத்தின் போதும் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி செய்வதற்கு அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிடும். ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாக கூடிய இந்த அறிவிப்பு அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை நடைமுறையில் இருக்கும்.

அந்த வகையில் 2025 ஏப்ரலில் வெளியான அறிவிப்பு கடந்த மார்ச் 31ஆம் தேதியுடன் முடிந்து விட்டது. அதன் பிறகு DGFT இதுவரை புதிதாக எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதாவது தங்கம், வெள்ளியை இறக்குமதி செய்வதற்கு அங்கீகாரம் அளித்து வங்கிகள் , நிறுவனங்களின் பட்டியலை வெளியிடாமல் உள்ளது. எனவேதான் இந்திய வங்கிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை வெளிநாடுகளில் இருந்து தங்கம், வெள்ளி இறக்குமதி செய்யாமல் நிறுத்தி வைத்திருக்கின்றன என தகவல்கள் வெளியாகின.
DGFT-இன் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வராமல் இருந்ததால் 8 டன் வெள்ளி, 5 டன் தங்கம் சுங்கத்துறை கிளியரன்ஸ் செய்யாமல் தேங்கி கிடக்கிறது என்றும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே கிளியரன்ஸ் கொடுத்து இந்த தங்கமும் வெள்ளியும் இந்தியாவில் கொண்டு வரப்படும் , அதே போல புதிய ஆர்டர்களும் கொடுக்கப்படும் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
உலக சந்தையில் ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய், எரிவாயு, உரம் ஆகியவற்றின் விலைகள் உயர்ந்திருக்கின்றன. இதனால் இந்தியா ஒவ்வொரு பொருளையும் இறக்குமதி செய்வதற்கான செலவு அதிகரித்து இருக்கிறது. இத்தகைய சூழலில் வர்த்தக பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதற்காக அரசு தங்கம், வெள்ளி இறக்குமதிக்கு இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடாமல் இருப்பதாக சொல்லப்பட்டது.
இதனால் தங்கம், வெள்ளி விலை உயருமோ என்ற அச்சம் எழுந்த நிலையில் மத்திய அரசு வங்கிகள் தங்கம், வெள்ளி இறக்குமதி செய்ய அங்கீகாரம் அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி ஆக்சிஸ் வங்கி, பேங்க் ஆப் இந்தியா, ஃபெடரல் பேங்க், ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ, கோடக் மகேந்திரா, எஸ்பிஐ, கரூர் வைசியா வங்கி, எஸ் பேங்க் உள்ளிட்ட 15 வங்கிகள் 2029 ஆம் ஆண்டு மார்க் 31ஆம் தேதி வரை தங்கம் மற்றும் வெள்ளியை இறக்குமதி செய்ய அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. யூனியன் பேங்க் ஆப் இந்தியா தங்கத்தை மட்டும் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து வங்கிகள் நிலுவையில் இருக்கக்கூடிய தங்கம் மற்றும் வெள்ளியை இறக்குமதி செய்ய தொடங்கும் இதன் காரணமாக உள்நாட்டில் தங்கம் , வெள்ளிக்கான சப்ளை சீராகும் எனவே பெரிய அளவில் விலை உயர்வது என்பது தடுக்கப்படும்.
news updated with latest government approval for gold import order to the banks
More From GoodReturns

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

மதுரையில் இன்று தங்கம் விலை என்ன? நகை வாங்கலாமா காத்திருக்கலாமா?

இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம்!! அட்சய திருதியை-க்கு ஒரு நாளே இருக்கும் நிலையில் விலை சரிவு!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

அட்சய திருதியை: தங்கம் Pre- Booking செய்வதால் நமக்கு என்ன லாபம்? Pre- Bookingஇல் கவனிக்க வேண்டியது என்ன?

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

தொடர்ந்து உயரும் தங்கம், வெள்ளி விலை: இனி வரும் நாட்களிலும் விலை உயருமா?

தங்கம், வைரம் எல்லாம் ஒரம்போங்க! 1 கிராம் விற்றால் 200 கிலோ தங்கம் வாங்கலாம்!என்னது,இவ்வளவு விலையா?

தங்கம், வெள்ளி விலை மேலும் 10% குறையுமா? எல்லாம் டிரம்ப் எடுக்கும் முடிவில் தான் இருக்கு!!

மதுரையில் இன்று தங்கம் விலை எகிறியது! நகை வாங்க காத்திருந்தோர் ஷாக்!

அட்சய திருதியை தங்கம் விற்பனை: மக்களே இத கவனிக்கலனா உங்க தலையில துண்டு!!

தங்கம் விலை அதிரடி உயர்வு!! அட்சய திருதியைக்கு 5 நாட்களே இருக்கும் நிலையில் திடீர் விலை ஏற்றம்!!

கோவை மக்களே இன்று தங்க நகை வாங்கும் பிளான் இருக்கா? இது தான் உங்க ஊர் கோல்டு ரேட்!!

தங்கம் விலை: 11 நாட்களில் 5 நாட்கள் விலை ஏறி இருக்கு!! அப்போ அடுத்த வாரம் என்ன ஆகும்?



Click it and Unblock the Notifications

