டெல்லி: மத்திய அரசு தங்கம் உட்பட 20க்கும் மேற்பட்ட பொருட்களின் மீதான சுங்க வரியை உயர்த்துவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹிந்துஸ்தான் டைம்ஸ் அதிகாரிகள் இருவர் கூறியதாக இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
பொதுவாக பண வீக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்கவும், அத்தியாவசிய பொருட்களின் போதுமான விநியோகத்தை உறுதிப்படுத்தவும் அரசு அவ்வப்போது சுங்க வரிகளில் மாற்றங்களை கொண்டு வரும். அது தவிர உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் இது போன்ற சுங்க வரிகள் மாற்றம் செய்யப்படுகின்றன.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முழு நீள பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைத்து அவர் அறிவிப்பு வெளியிட்டார். இதன் காரணமாக இந்தியாவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் விகிதம் அதிகரித்துள்ளது. அதே வேளையில் ரத்தினங்கள் மற்றும் நகைகள் போன்ற பொருட்களின் ஏற்றுமதி குறைந்து இருக்கிறது.
ஜூலை 23ஆம் தேதி அன்று தாக்கல் செய்யப்பட்ட முழு நீள பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்கவரி 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதம் என குறைக்கப்பட்டது. பிளாட்டினம், பலேடியம், ஓஸ்மியம் , ருதேனியம், இரிடியம் ஆகியவற்றின் மீதான சுங்கவரியும் 15.4 சதவீதத்திலிருந்து 6.4 சதவீதம் என குறைக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு வெளியான அடுத்த மாதமான ஆகஸ்டிலேயே இந்தியாவில் தங்கம் இறக்குமதி செய்யப்படும் விகிதம் 104 சதவீதம் அதிகரித்தது. அதுவே ரத்தினங்கள் மற்றும் பிற நகைகளை ஏற்றுமதி செய்யும் விகிதம் 23 சதவீதம் குறைந்துவிட்டது.
ரத்தினம் மற்றும் நகைகள் உற்பத்தியில் முக்கிய பொருளாக தங்கம் இருக்கிறது. இது தவிர சில மின்னணு சாதனங்களிலும் சிறிய அளவில் தங்கம் பயன்படுத்தப்படுகிறது. ஜூலை 23ஆம் தேதி தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்கவரி குறைப்பு குறித்து அறிவிப்பை வெளியிட்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் "தங்கம் மற்றும் விலை மதிப்பற்ற உலோக நகைகளின் உள்நாட்டு மதிப்பை அதிகரிக்க தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரியை 6 சதவீதமாகவும் பிளாட்டினத்தின் மீதான சுங்க வரியை 6.4 சதவீதமாகவும் குறைக்க முன்மொழிகிறேன்" என தெரிவித்திருந்தார்.
ஆனால் அரசின் நோக்கம் இதில் நிறைவேறவில்லை என்பது சமீபத்திய மாதாந்திர வர்த்தக தரவுகள் தெரிவிக்கின்றன. நவம்பர் மாதத்தில் இந்தியாவில் தங்கத்தின் இறக்குமதி 331.5% என உயர்ந்து அதன் மதிப்பு 14.86 பில்லியன் டாலர்களாக இருக்கிறது, இதுவே கடந்த ஆண்டு வெறும் 3.4 பில்லியன் டாலராக தான் இருந்தது.
அதே வேளையில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படக்கூடிய இரத்தினங்கள் மற்றும் நகைகளின் அளவு 26.6 சதவீதம் என குறைந்து மொத்த மதிப்பு வெறும் 2.06 பில்லியன் என மாறியிருக்கிறது.
எனவே தங்கத்தின் இறக்குமதி உள்நாட்டு நுகர்வுக்கு நுகர்வுக்கு தான் ஆதரவளிக்கிறதே தவிர ஏற்றுமதிக்கான பொருட்களுக்கு மதிப்பு கூட்ட பயன்படுத்தப்படவில்லை என்பது தெரிய வருகிறது. எனவேதான் அரசு தங்கம் உள்ளிட்ட பொருட்கள் மீதான இறக்குமதி வரியை மீண்டும் உயர்த்த வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

வெள்ளி விலை 15 ஆண்டுகளில் இல்லாத மோசமான சரிவு! அடுத்து என்ன நடக்கும்? நிபுணர்கள் சொல்வது இதுதான்!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!



Click it and Unblock the Notifications