ஈரான் போர் காரணமாக இந்தியா முன்பை விட அதிக விலை கொடுத்து உலக சந்தையில் கச்சா எண்ணெய் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி இருக்கிறது. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் உயரும் போதெல்லாம் இந்தியாவில் எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தும்.
மார்ச், ஏப்ரல் என இரண்டு மாத இரண்டு மாதங்களாக கச்சா எண்ணெய் விலை பல மடங்கு உயர்ந்த போதிலும் இந்தியாவை சேர்ந்த பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ,இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உள்ளிட்ட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல். டீசல் விலையில் கை வைக்காமல் இருக்கின்றன. மத்திய அரசு மக்கள் மீது நிதிச் சுமையை ஏற்படுத்தக் கூடாது என கூறியதால் இந்த பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தை ஏற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் இது நீண்ட காலத்திற்கு தாக்கு பிடிக்காது என்று சொல்லப்படுகிறது. எனவே கூடிய விரைவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கான வாய்ப்பு உண்டாக இருப்பதாகவே தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த சூழலில் தான் பிரதமர் நரேந்திர மோடி பெட்ரோல் ,டீசல் போன்ற எரிபொருட்களை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருக்கிறார். கச்சா எண்ணெய் சப்ளை இன்னும் சீராகவில்லை இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த வேண்டுகோள் முக்கியத்துவம் பெறுகிறது. கூடிய விரைவில் இந்தியாவில் எனர்ஜி லாக் டவுன் போன்ற ஒரு சூழல் உண்டாவதற்கான ஒரு முக்கியமான சிக்னலாக பிரதமர் நரேந்திர மோடியின் இந்த வேண்டுகோள் பார்க்கப்படுகிறது.
மக்கள் பொது போக்குவரத்து ஆன அரசு பேருந்து , மெட்ரோ மற்றும் ரயில்களை அதிகமாக பயன்படுத்த வேண்டும் எரிபொருள் சிக்கனத்திற்காக மக்கள் முடிந்த அளவு வீடுகளில் இருந்தே வேலை செய்ய வேண்டும், அது மட்டும் இல்லாமல் நாட்டின் அந்நிய செலாவணி இருப்பை பாதுகாக்க அடுத்த ஓராண்டு காலத்திற்கு தங்கம் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என மோடி கேட்டுக் கொண்டிருக்கிறார். அதாவது இந்தியா தங்கத்தையும் டாலரை கொடுத்து தான் இறக்குமதி செய்கிறது. கையில் இருக்கும் டாலரை தங்கம் வாங்க செலவு செய்துவிட்டால் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு டாலர் இருப்பு குறைந்து விடுகிறது. எனவே மக்கள் நாட்டின் பொருளாதாரச் சூழலை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என மோடி கேட்டுக் கொண்டிருக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி மக்கள் தங்கம் வாங்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார் என்பதற்காக மக்கள் தங்கம் வாங்குவதை நிறுத்தி விடுவார்களா என்றால் நிச்சயம் கிடையாது. ஏனெனில் வரலாற்று உச்சபட்ச வையிலிருந்து தங்கத்தின் விலை தற்போது சரிவடைந்து இருக்கிறது. மீண்டும் எப்போது வேண்டுமானாலும் தங்கத்தின் விலை உயரலாம் என்ற நிலை இருக்கிறது என்பதால் விலை குறைந்திருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி தங்கத்தை வாங்கிக் கொள்ளலாம் என வாங்குகிறார்கள். எனவே மக்கள் தங்கம் வாங்குவதை குறைப்பதற்கு மத்திய அரசு தங்கம் , வெள்ளி மீதான இறக்குமதி வரிகளை உயர்த்தப் போவதாக ஒரு தகவல் வெளியானது.
தற்போது ஆறு சதவீதமாக இருக்கக்கூடிய இறக்குமதி வரியை அரசு உயர்த்தலாம் என சொல்லப்பட்டது. அவ்வாறு இறக்குமதி வரி உயர்ந்தால் தங்கம் விலை உயரும். இந்த சூழலில் தான் மணி கண்ட்ரோல் தனத்திற்கு மத்திய அரசு அதிகாரிகள் அளித்துள்ள தகவலில் தற்போதைக்கு தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை உயர்த்தும் எந்த ஒரு திட்டமும் அரசிடம் பரிசீலனையில் இல்லை என விளக்கம் தந்திருக்கின்றன. இது கோடிக்கணக்கான சாமானிய மக்களுக்கு பெரிய நிம்மதியாக அமைந்திருக்கிறது.
ஏனெனில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டால் இந்தியாவின் சில்லறை விற்பனையில் தங்கத்தின் விலை உயரும். ஏற்கனவே ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் ஒரு சவரன் தங்கம் விற்பனையாகும் நிலையில் மத்திய அரசு இறக்குமதி வரியை உயர்த்திவிட்டால் அதை காரணமாக கூறி தங்கம் விற்பனை செய்யும் நிறுவனங்கள் இன்னும் அதிகமாக தங்கத்தின் விலையை உயர்த்த வாய்ப்புள்ளது. தற்போது அரசு அப்படியே எந்த ஒரு திட்டமும் இல்லை என அறிவித்து விட்டதால் தற்போதைக்கு பெரிய அளவிலான ஒரு தங்கம் விலை உயர்வு இருக்காது என்ற நிம்மதி மக்களுக்கு இருக்கிறது. இருந்தாலும் பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளையும் மக்கள் பரிசீலனை செய்ய வேண்டும்.


Click it and Unblock the Notifications

