டெல்லி: மத்திய அரசு தங்க பத்திர திட்டத்தை கைவிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2015 ஆம் ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறையை தீர்க்கவும், தங்க இறக்குமதியை கட்டுப்படுத்தும் நோக்கிலும் மத்திய அரசு தங்க பத்திர திட்டத்தை அறிமுகம் செய்தது.
மக்கள் தங்க நகைகளில் முதலீடு செய்வதை தடுக்கவும் தங்க பத்திரங்களில் முதலீடு செய்வதை ஈர்க்கவும் இதில் செய்யும் முதலீடுகளுக்கு ஆண்டுதோறும் வட்டியும் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. எனவே ஏராளமானவர்கள் தங்களுடைய பணத்தை தங்க பத்திரங்களில் முதலீடு செய்தனர். இந்நிலையில் நடப்பு ஆண்டில் இதுவரை அரசு தங்க பத்திர வெளியீடு குறித்து அறிவிப்பை வெளியிடவில்லை.

2025 - 26ஆம் நிதி ஆண்டில் தங்க பத்திர திட்டம் முழுமையாக கைவிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக பிசினஸ் ஸ்டாண்டர்ட் வெளியிட்டுள்ள செய்தியில் தங்க பத்திர திட்டம் அரசு எதிர்பார்த்த அரசின் நோக்கத்தை நிறைவேற்ற வில்லை என மூத்த அதிகாரிகள் தெரிவித்ததாக கூறுகிறது.
குறிப்பாக தங்க பத்திர திட்டம் அரசுக்கு பெரிய நிதிச்சுமையை ஏற்படுத்தி இருப்பதாகவும் தெரிவிக்கிறது. தங்க பத்திரங்களில் முதலீடு செய்தவர்களுக்கு அந்த பத்திரம் முதிர்ச்சி அடையும் நாளில் தங்கத்தின் விலை என்னவோ அதனை அரசு தர வேண்டும், அது தவிர ஆண்டுதோறும் வட்டியும் கணக்கீடு செய்து தர வேண்டும்.
தங்கத்தின் விலை கடந்த 9 ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துள்ளது. எனவே அரசு தங்க பத்திரம் மூலம் திரட்டிய பணத்தைவிட பல மடங்கு தொகையை திரும்ப வழங்க வேண்டிய சூழல் உண்டாகியுள்ளது. இது அரசுக்கு பெரிய நிதிச்சுமையை ஏற்படுத்தி இருக்கிறது. உதாரணமாக முதல் முதலில் அரசு தங்க பத்திரத்தை வெளியிட்ட போது 245 கோடி ரூபாயை நிதியாக திரட்டியது.
அப்போது 49 லட்சம் யூனிட் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 2,684 ரூபாய் என இருந்தது. அதுவே முதிர்ச்சி அடைந்து திரும்ப அந்த முதலீட்டாளர்களுக்கு வழங்கும்போது 6132 ரூபாய் என ஒரு கிராமின் விலை உயர்ந்திருந்தது.
கிட்டத்தட்ட 120% இது அதிகமாகும். அது மட்டும் இன்றி ஆண்டுக்கு 2.5% வட்டியும் வழங்க வேண்டும். 245 கோடி நிதியாக திரட்டி அரசு அதனை திரும்ப வழங்கும் போது 560 கோடி ரூபாய் தங்கத்தின் விலை மற்றும் 49 கோடி ரூபாய் வட்டி என 610 கோடி ரூபாயை செலவிட வேண்டி இருந்தது.
எனவே இந்த திட்டத்தை கைவிடுவதே சிறந்தது என அரசு கருதுகிறதாம். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026 ஆம் நிதியாண்டு பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என சொல்லப்படுகிறது.
தற்போது அரசு நிதி பற்றாக்குறையை 4.5 சதவீதத்துக்கு கீழ் கொண்டு வர வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. எனவே அது தொடர்பான முக்கிய நடவடிக்கையாக புதிய தங்க பத்திரங்கள் வெளியீடு கிடையாது என்ற அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.
Story Written by: Devika
More From GoodReturns

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

கோயம்புத்தூரில் தங்கம் விலை திடீர் உயர்வு.. மக்களே உஷார், தங்கம் நகை வாங்கும் முன் இதை படிங்க..!

தங்கம் விலை மதுரை: இன்று அதிரடி உயர்வு! நகைப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்த சர்வதேச காரணங்கள்..!

சூப்பர்பவர் ஆக மாறிய தங்கம்.. ஈரான் போருக்கு மத்தியில் பூகம்பம்..!!

தங்க குழந்தையாக மாறிய சஞ்சு சாம்சன் – இது தான் 'கன்வெக்ஸ்' வெற்றியா? காத்திருந்து கிடைத்த பெரும் லாபம்!

கோயம்புத்தூர் தங்கம் விலை: தொழில் நகரத்தில் இன்று தங்கம் விலை உயர்ந்ததா ? குறைந்ததா?

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!



Click it and Unblock the Notifications