கிண்டி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் பாலாஜி என்பவரை விக்னேஷ் என்ற நபர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டாக்டர் பாலாஜி கிண்டி மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் பணிபுரிகிறார். அவர் வழக்கம் போல பணியில் இருந்த போது தனது தாய்க்கு சரிவர சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி டாக்டர் பாலாஜியை விக்னேஷ் என்ற இளைஞர் சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் டாக்டருக்கு 7 இடங்களில் வெட்டு விழுந்தது.
ஆனால் விக்னேஷ் ஏன் டாக்டர் பாலாஜியை கத்தியால் குத்தினார் என்ற விவரங்கள் வெளிவராமல் இருந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் விக்னேஷ், அவர் ஏன் இப்படி நடந்து கொண்டார் என்பதற்கான வாக்குமூலத்தை கொடுத்திருக்கிறார். அதில் தன் தாயாருக்கு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் கிண்டி மருத்துவமனையில் கிமோதெரபி சிகிச்சை எடுத்ததாகவும், ஆனாலும் அவருடைய தாயாரின் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்ததாகவும் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி தனியார் மருத்துவமனையில் எடுத்த சிகிச்சையினால் தன் தாயார் உடல் நலம் தேரி வருகிறார் என்றும், அரசு மருத்துவமனையில் தன் தாயாருக்கு சரியான மருத்துவ சிகிச்சை வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார். விக்னேஷும் ஒரு இதய நோயாளி. ஏற்கனவே தனது தந்தையை இழந்த விக்னேஷ் தனது தாயாரையும் இழந்து விடக்கூடாது என்பதற்காக இப்படி நடந்திருக்கலாம் என பல்வேறு கருத்துகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் டாக்டர் பாலாஜிக்கு இப்படி நடந்தது குறித்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் பேச்சுவார்த்தைக்கு பிறகு தற்போது இந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. நடந்து முடிந்த இந்த சம்பவமே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நொய்டாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை சிகிச்சையே அளிக்காமல் கட்டணமாக 45,000 ரூபாயை வசூலித்துள்ளது.
தங்களுடைய 7 வயது மகனுக்கு எந்த வித அறுவை சிகிச்சையும் செய்யாமல் கண் அறுவை சிகிச்சை செய்ததாக கூறி மருத்துவமனை கட்டணம் வசூலித்துள்ளது. கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஆனந்த் ஸ்பெக்ரம் மருத்துவமனையில் தங்கள் மகனை பெற்றோர் அனுமதித்துள்ளனர். சிறுவன் தனது இடது கண்ணில் இருந்து தொடர்ந்து நீர் வடிவதாக கூறியதால் பெற்றோர்கள் அந்தச் சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
"எனது மகன் தொடர்ந்து தன்னுடைய இடது கண் உறுத்துவது போல இருப்பதாக கூறினான். இதற்காக நாங்கள் காமா ஒன்றில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அவனுடைய கண்ணில் ஏதோ ஒரு பார்டிகிள் இருப்பதாக எங்களிடம் கூறப்பட்டது. அதை அறுவை சிகிச்சை மூலம் தான் அகற்ற வேண்டும் என்றும் கூறினார்கள்.
திங்கட்கிழமை அன்று இந்த சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருந்து 45,000 ரூபாய் வசூலித்தனர். அறுவை சிகிச்சைக்குப் பிறகு மகனின் கண்ணில் இருந்து அகற்றப்பட்டதாக கூறி சிறிய உலோகம் போன்ற துகளை காண்பித்தனர்" என்று அந்த சிறுவனின் தந்தை கூறியிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிறுவனை பார்த்துள்ளனர். அப்போதுதான் இது மோசடி என்பது தெரியவந்துள்ளது. சிறுவனின் கண்களில் அறுவை சிகிச்சை செய்யப்படவில்லை என்றும், அங்கு உள்ள மருத்துவர்கள் பெற்றோரிடம் கூறியுள்ளனர்.
குழந்தையின் இடது கண்ணில் அசௌகரியம் இருப்பதாக புகார் கூறியபோது, வலது கண்ணில் கட்டு போடப்பட்டதாகவும் குடும்பத்தினர் குற்றம் சாட்டி இருந்தனர். எந்தவித அறுவை சிகிச்சையும் செய்யப்படாமல் மயக்க மருந்து கொடுத்த காரணத்தினால் குமட்டல் போன்ற பிற பிரச்னைகளால் குழந்தை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.தற்போது இந்த வழக்கை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications