சோன்பத்ரா என்கிற இந்தி சொல்லுக்கு, தங்கத்தால் நிறைந்திருக்கும் இடம் என்று பொருளாம்.
பெயருக்கு தகுந்தாற் போல, தங்கத்தால் தான் நிறைந்து இருக்கிறது சோன்பத்ரா என பூரித்துக் கொண்டிருந்தோம்.
இந்த சோன்பத்ரா எங்கு இருக்கிறது. இந்த இடத்தில் யார் எல்லாம் தங்கம் தேடி இருக்கிறார்கள் போன்ற சுவாரஸ்ய விவரங்களைத் எல்லாம் பகிர்ந்து கொண்டிருந்தோம்.
சோபன் பத்ரா
யோகி ஆதித்யநாத் ஆளும் உத்திரப் பிரதேச மாநிலத்தின் மிகப் பெரிய மாவட்டங்களில் இதுவும் ஒன்று. இந்த மாவட்டத்தின் தனிச் சிறப்பு என்ன என்றால், இந்த மாவட்டம் மட்டும் 4 மாநில எல்லைகளைக் கொண்டது. மத்தியப் பிரதேசம், சத்திஸ்கர், ஜார்கண்ட் மற்றும் பீகார். இதற்கு எல்லாம் மேல், இது மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இருக்கும் பகுதியாம்.
தங்கம்
இந்த மாவட்டத்தில், சோன் பஹாடி என்கிற பகுதியில் சுமாராக 2,943 டன் தங்கமும், ஹார்டி என்கிற பகுதியில் சுமாராக 646 டன் தங்கமும் இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. தங்கம் மட்டுமின்றி, மற்ற சில கனிமங்களும் இருப்பதாகச் செய்திகள் வெளியானது.
தேடுதல் வேட்டை
பிரிட்டிஷ்காரர்கள், இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த போதே, இந்த சோன் பத்ரா பகுதியில் தங்கம் இருக்கலாம் என யூகித்து இருக்கிறார்கள். அந்த யூகத்தை சரி பார்க்க, பிரிட்டிஷ்காரர்களே, அன்றைய சோன் பத்ரா பகுதியில் தங்கத்தை தேடி அலைந்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின.
ஜி எஸ் ஐ மறுப்பு
ஆனால் தற்போது பிடிஐ-ன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "மாவட்ட சுரங்க அதிகாரிகள் சொன்னது போல, உத்திரப் பிரதேசத்தில் சோபன் பத்ரா மாவட்டத்தில், 3,000 டன் அளவுக்கு எல்லாம் தங்கம் கண்டு பிடிக்கவில்லை" என Geological Survey of India (GSI) அமைப்பு சொல்லி இருப்பதாக பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
பரபரப்பு
இந்தியாவில் 3,600 டன் தங்கமா என கடந்த சில நாட்களாக இந்தியா முழுக்க பேசப்பட்டு வந்த பரபரப்பான தங்க சுரங்க செய்திக்கு தற்போது Geological Survey of India (GSI) முற்றுப் புள்ளி வைத்திருக்கிறது. கூடிய விரைவில் இந்த அமைப்பிடம் இருந்து, முறையான விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
More From GoodReturns

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?



Click it and Unblock the Notifications