இந்தியாவில் மறைமுக வரி விதிப்பு முறையை, ஜிஎஸ்டி கட்டமைப்பு மூலம் மாற்றியமைக்கப்பட்ட பின்பு, இப்பிரிவின் கீழ் வசூல் செய்யப்படும் வரி அனைத்தும் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டிற்கு செல்கிறது. மதுபானம், பெட்ரோல் பொருட்கள், மின்சாரம், நாணயம் மற்றும் ரூபாய் நோட்டுக்கள் மீது மட்டுமே ஜிஎஸ்டி வரம்புக்கு வெளியே உள்ளது. இதை தவிர்த்து அனைத்து சேவை மற்றும் பொருட்களும் ஜிஎஸ்டி வரி விதிப்புக்குள் உள்ளது.
இந்த நிலையில் ஜிஎஸ்டி கீழ் வசூல் செய்யப்படும் வருவாய் அனைத்தையும் மத்திய நிதியமைச்சகம், மாநிலங்களுக்கான வரி பங்கீட்டை ஒவ்வொரு மாதமும் பகிர்ந்து அளித்து வருகிறது. இந்த பங்கீட்டு அளவை மாற்றும் முயற்சிகள் தான் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்தியாவின் 28 மாநில அரசுகளில் பெரும்பாலானவை, மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான வரி வருவாய் பங்கீட்டை தற்போதைய 41 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என 16-வது நிதி ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. இந்தத் தகவலை இந்த ஆணையத்தின் தலைவர் அரவிந்த் பனகாரியா புதன்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
ஏன் முக்கியம்: மத்திய அரசிடம், டாக்டர் அரவிந்த் பனகாரியா தலைமையிலான குழு விரைவில் 16-வது பைனான்ஸ் கமிஷன் அறிக்கையைச் சமர்ப்பிக்க உள்ளது. இதற்காக இந்த ஆணையம் பலகட்ட ஆலோசனையை மாநில வாரியாக செய்து வருகிறது. அரவிந்த் பனகாரியா சமர்ப்பிக்கும் வரி பகிர்வு குறித்த பரிந்துரைகள் தான் 2026-27 நிதியாண்டு முதல் அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கு நடைமுறையில் இருக்கும் என்பதால் மாநில அரசுகள் ஜிஎஸ்டி வரி பகிர்வை உயர்த்துவதில் தீவிரமாக உள்ளது.
தற்போது ஜிஎஸ்டி வரி வசூலில் மாநில அரசுகளுக்கு 41 சதவீத வரி வருவாயும், மத்திய அரசுக்கு 59 சதவீத வருவாயும் பகிர்ந்தளிக்கப்படுகிறது என்றும், இது 15வது பைனான்ஸ் கமிஷனில் நிர்ணயக்கப்பட்டது. இந்த முறையை மாற்றி, மாநிலங்களுக்கு அதிக பங்கு வழங்க வேண்டும் என்று பல மாநிலங்கள் வலியுறுத்தி வருகின்றன என அரவிந்த் பனகாரியா இந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
மாநிலங்களின் கோரிக்கை: உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் போது, பனகாரியா செய்தியாளர்களிடம் பேசினார், அப்போது "28 மாநிலங்களில் 22-க்கும் மேற்பட்டவை, வரி வருவாய் பங்கீட்டை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளன. உத்தரப்பிரதேசமும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளது," என்று அவர் கூறினார். இந்தக் கோரிக்கை நிறைவேற்றுவது மூலம், மாநிலங்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் என்று மாநிலங்கள் கருத்து தெரிவித்துள்ளது.
நிதி ஆணையம்: நாட்டின் அனைத்து மாநிலங்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக, அரவிந்த் பனகாரியா தலைமையிலான பைனான்சியல் கமிஷன் உத்தரப்பிரதேசத்திற்கு சென்றுள்ளது. இந்த பயணத்தின் போது தான் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. ஆனால் நிதி ஆணையம் இந்த 50 சதவீத பங்கீடு கோரிக்கையை ஏற்குமா என்பது குறித்து பனகாரியா வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. இந்த பரிந்துரை குறித்த இறுதி முடிவு, ஆணையத்தின் அறிக்கையில் குடியரசு தலைவருக்கு சமர்ப்பிக்கப்படும் போது தெளிவாகும்.
மாநில அரசுகளின் பரிந்துரை படி 50 சதவீத வர பங்கீட்டை கொடுத்தால் மத்திய அரசு பல்லாயிரம் கோடி வரி வருவாயை இழக்க நேரிடும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications