இந்தியாவின் மறைமுக வரி விதிப்பில் வரலாற்றில் மிகப்பெரிய மாற்றம் செய்ய ஜிஎஸ்டி கவுன்சில் பச்சைக்கொடி காட்டியுள்ளது. இன்றைய கூட்டத்தின் இறுதியில் ஜிஎஸ்டி 2.0 (GST 2.0) மாற்றங்கள் வரும் செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகிறது. இதனால், வர்த்தக நிறுவனங்கள், சிறு வணிகங்கள் மற்றும் நுகர்வோருக்கு பெரும் மாற்றத்தை எதிர்கொள்ள உள்ளனர்.
இப்போது நடைமுறையில் உள்ள நான்கு ஜிஎஸ்டி வரி நிலைகளான 5%, 12%, 18% மற்றும் 28% அளவுக்கள் புதிய முறையில் அது இரண்டு நிலைகளாக குறைக்கப்பட உள்ளது. இந்த வரி பலகை குறைப்பை ஜிஎஸ்டி கவுன்சில் அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
1. முக்கிய பொருள்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு 5% வரி.
2. பெரும்பான்மை பொருட்கள் மற்றும் சேவைகள் - 18% "ஸ்டாண்டர்ட்" விகிதம்.

இந்த சுருக்கப்பட்ட இரண்டு நிலை வரிமுறை மூலம் சந்தையில் வரி விதிப்பில் இருக்கும் குழப்பங்கள் குறையலாம், வாணிகச் செலவுகள் எளிமையாகக் கணக்கிடப்படலாம் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். இதேபோல் பல பொருட்களின் விலை குறையும் என்பதால் மக்களுக்கு கையில் கூடுதல் நிதி ஆதாரம் கிடைக்கும்.
மேலும் கவனிக்க கூடிய விஷயமாக பான் மசாலா, குட்கா, சிகரெட், ஜர்தா, சுருட்டு (பீடி), போன்ற புகையிலை சார்ந்த பொருட்களில் தற்போதுள்ள ஜிஎஸ்டி விகிதங்கள் மற்றும் இழப்பீடு செஸ் (Compensation Cess) அப்படியே தொடரும் என தகவல் வெளியாகியுள்ளது. இது மிகப்பெரிய டிவிஸ்டாக பார்க்கப்படுகிறது, நாளை ஐடிசி பங்குகள் உயர வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
புகையிலை பொருட்கள் மீது 40 சதவீத வரி விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மாற்றமின்றி நடைமுறைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு முக்கிய காரணம், மத்திய அரசு இன்னும் கடன் மற்றும் வட்டி தொகுப்புகளை முழுமையாகத் தீர்க்கவில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த பொருட்களுக்கான புதிய வரி விகித நடைமுறையை எப்போது தொடங்குவது என்பதை நிதியமைச்சகமும், ஜிஎஸ்டி கவுன்சிலும் இணைந்து முடிவு செய்யும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications