புதிய ஜிஎஸ்டி 2.0 (GST 2.0) முறையின் கீழ், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களின் விலைகள் திங்கள்கிழமை (செப்டம்பர் 22, 2025) முதல் குறைய உள்ளன. இந்த மாற்றங்கள், நாட்டின் புதிய 'இரண்டு அடுக்கு' வரி அமைப்பின் ஒரு பகுதியாகும்.
புதிய ஜிஎஸ்டி அமைப்பு: மத்திய அரசு தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் (GST Council), செப்டம்பர் 3 அன்று நடைபெற்ற 56வது கூட்டத்திற்குப் பிறகு, நாட்டின் மறைமுக வரி அமைப்பை இரண்டு அடுக்குகளாக (5% மற்றும் 18%) மாற்றுவதாக அறிவித்தது. இதன்மூலம், பெரும்பாலான பொருட்கள் மற்றும் சேவைகள் இந்த இரண்டு வரி அடுக்குகளுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

சுகாதாரத் துறையைப் பொறுத்தவரை, அரசு குறிப்பிடத்தக்க வரி விலக்குகளையும், குறைப்புகளையும் அறிவித்துள்ளது. இதனால், பல முக்கிய மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்கள் மலிவாகக் கிடைக்கும்.
பூஜ்ஜிய வரி விதிக்கப்படும் மருந்துகள்: முன்னர் 5% ஜிஎஸ்டி விகிதத்தைக் கொண்டிருந்த பின்வரும் மூன்று உயிர்காக்கும் மருந்துகள், இப்போது புதிய ஜிஎஸ்டி கட்டமைப்பின் கீழ் 'பூஜ்ஜிய' வரியை கொண்டிருக்கும்.
அகல்சிடேஸ் பீட்டா (Agalsidase Beta)
இமிக்ளூசரேஸ் (Imiglucerase)
எப்டாகாக் ஆல்ஃபா (Eptacog Alfa)
12% இலிருந்து பூஜ்ஜிய வரிக்குக் குறைக்கப்பட்டவை: திங்கள்கிழமை முதல், முன்னர் 12% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்ட பின்வரும் 33 உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்கள், இப்போது பூஜ்ஜிய வரியை ஈர்க்கும். இந்த அதிரடி நடவடிக்கை, கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குப் பெரும் நிம்மதியை அளிக்கும்.
முழுப் பட்டியல்: ஓனாசெம்னோஜீன் அபேபர்வோவெக் (Onasemnogene Abeparvovec)
அஸ்கிமினிப் (Asciminib)
மெபோலிசுமாப் (Mepolizumab)
பெகிலேட்டட் லிபோசோமல் இரினோடோகன் (Pegylated Liposomal Irinotecan)
தரதுமுமாப் (Daratumumab)
டெக்லிஸ்டாமாப் (Teclistamab)
அமிவந்தமாப் (Amivantamab)
அலெக்டினிப் (Alectinib)
ரிஸ்டிப்லாம் (Risdiplam)
ஒபினுடுசுமாப் (Obinutuzumab)
போலட்டுசுமாப் வேடோடின் (Polatuzumab Vedotin)
என்ட்ரெக்டினிப் (Entrectinib)
அடெசோலிசுமாப் (Atezolizumab)
ஸ்பெசோலிமாப் (Spesolimab)
வெலாக்ளூசரேஸ் ஆல்பா (Velaglucerase Alfa)
அகல்சிடேஸ் ஆல்ஃபா (Agalsidase Alfa)
ரூரியோக்டோகாக் ஆல்பா பெகோல் (Rurioctocog Alfa Pegol)
இடுர்சல்பேட்டஸ் (Idursulfase)
ஆல்குளுக்கோசிடேஸ் ஆல்ஃபா (Alglucosidase Alfa)
லரோனிடேஸ் (Laronidase)
ஒலிபுடேஸ் ஆல்ஃபா (Olipudase Alfa)
டெபோடினிப் (Tepotinib)
அவெலுமாப் (Avelumab)
எமிசிசுமாப் (Emicizumab)
பெலுமோசுடில் (Belumosudil)
மிக்லஸ்டாட் (Miglustat)
வெல்மனேஸ் ஆல்ஃபா (Velmanase Alfa)
அலிரோகுமாப் (Alirocumab)
எவோலோகுமாப் (Evolocumab)
சிஸ்டமைன் பிடார்ட்ரேட் (Cysteamine Bitartrate)
CI-தடுப்பான் ஊசி (CI-Inhibitor Injection)
இன்க்ளிசிரன் (Inclisiran)
புளூட்டிகசோன் ஃபுரோயேட் (Fluticasone Furoate)
பிரெண்டுக்ஸிமாப் வேடோடின் (Brentuximab Vedotin)
Ocrelizumab
பெர்டுசுமாப் (Pertuzumab)
ஃபாரிசிமாப் (Faricimab)
கூடுதலாக, இந்த முக்கியமான மருந்துகளின் பல கூறுகள், அவற்றின் தற்போதைய 12% நிலையில் இருந்து 5% ஜிஎஸ்டிக்குக் குறைக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகளால், இந்திய மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்கள் துறையில் ஒரு புதிய விலை சீர்திருத்தம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிஎஸ்டி குறைப்பு: புகார் அளிக்கலாம்: ஜிஎஸ்ட் குறைப்பின் பலனை அளிக்காத நிறுவனங்கள் மீது வாடிக்கையாளர்கள் புகார் அளிக்க மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. நுகர்வோர் விவகாரத்துறைக்கு 1915 என்ற இலவச தொலைபேசி எண் மற்றும் ஒருங்கிணைந்த குறைதீர்ப்பு போர்ட்டல் மூலம் புகார் அளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications