பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரையில் அறிவிக்கப்பட்ட அடுத்த தலைமுறை GST மறுசீரமைப்பு முடிவு எந்தளவுக்கு மக்களையும், முதலீட்டாளர்களையும் கவர்ந்துள்ளது என்பது இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தை பார்த்தாலே புரிந்துவிடும். இந்திய பங்கு சந்தையில் சென்செக்ஸ் 1100 புள்ளிகள் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.
ஜிஎஸ்டி சமானிய மக்களுக்கு பெரும் சுமையாக இருக்கிறது என, அதன் அறிமுக காலத்தில் இருந்தே பொருளாதார வல்லுனர்கள் கூறி வந்த நிலையில், தொடர் மாற்றங்களுக்கு உட்பட்டு நடைமுறையில் இருந்து வரும் ஜிஎஸ்டி தற்போது பெரும் மாற்றத்தை சந்திக்க உள்ளது.

ஜிஎஸ்டி தற்போது 0 மற்றும் Sin Tax அல்லாத நான்கு அடுக்கு வரி முறையை 5 சதவீதம் மற்றும் 18 சதவீதம் என்ற இரண்டு அடுக்குகளாக மாற்றும், இதன் மூலம் 12 சதவீதத்தில் உள்ள 99 சதவீத பொருட்களை 5 சதவீதத்துக்கும், 28 சதவீதத்தில் உள்ள 90 சதவீத பொருட்களை 18 சதவீதத்துக்கும் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாற்றத்தின் மூலம் மத்திய மாநில அரசுக்களுக்கு ரூ.50,000 கோடி மதிப்பிலான வரி வருவாய் பாதிப்பை ஏற்படுத்தும் என்றாலும், இது சமாளிக்கும் அளவுக்குள் தான் இருக்கும் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த வரி மாற்றம் மூலம் பல முக்கிய துறைகள் அதிகளவிலான வர்த்தகத்தை பெறுவது மட்டும் அல்லாமல் இத்துறை பங்குகளும் பெரிய அளவில் வளர்ச்சி அடைய வாய்ப்புகள் உள்ளது. பிரதமர் அறிவித்தப்படி ஜிஎஸ்டி வரி 2 பலகைகளாக குறைக்கப்பட்டால் ஆட்டோமொபைல், சிமென்ட், நுகர்வு பொருட்கள், ரியல் எஸ்டேட் மற்றும் நிதி துறைகளில் சுமார் 40க்கும் மேற்பட்ட பங்குகளை பெரிய அளவில் உயரும் வாய்ப்பை பெறும் என்று தரகு நிறுவனங்கள் கணித்துள்ளன.
ஆட்டோமொபைல் துறை: இரு சக்கர வாகனங்கள், சிறு கார்கள் மற்றும் கமர்சியல் வாகனங்கள் பெரும் பயன் பெறும் என்று கூறியுள்ளன தரகு நிறுவனங்கள் கணித்துள்ளது. ஏனெனில் இந்த வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி விகிதம் 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறையலாம், இது 10 சதவீத குறைப்பு.
இதன் மூலம் பஜாஜ், ஹீரோ, டிவிஎஸ் மற்றும் எய்ச்சர் போன்ற இரு சக்கர வாகன உற்பத்தியாளர்களும், பயணிகள் வாகனங்கள் பிரிவில் மாருதி சுசூகி மிகப்பெரிய பயனாளியாக இருக்கும், ஏனெனில் இந்தியாவில் சிறிய கார்களுக்கு தற்போது 29-31 சதவீத வரி உள்ளது, இது குறையும் போது அதிகம் பலன் அடையப்போவது மாருதி தான்.
இதை தொடர்ந்து அசோக் லேலண்ட், டாடா மோட்டார்ஸ் மற்றும் ஐச்சர் போன்ற கமர்சியல் வாகன உற்பத்தியாளர்களும், மஹிந்திரா மற்றும் எஸ்கார்ட்ஸ் போன்ற டிராக்டர் நிறுவனங்களும் 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதம் அல்லது 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் வரை குறையலாம்.
சிமென்ட் துறை: தற்போது சிமென்ட்-க்கு 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும் வேளையில் இது 18 சதவீதமாக குறைந்தால், அரசுக்கு ரூ.20,000-25,000 கோடி வருவாய் பாதிப்பு ஏற்படலாம் என்று ஜெஃப்ரீஸ் மதிப்பிடுகிறது. ஆனால், இது சிமென்ட் விலையை 7.5-8 சதவீதம் குறைக்கும் என்று மோதிலால் ஓஸ்வால் கூறியுள்ளது.
இதன் மூலம் அல்ட்ராடெக் மற்றும் JK சிமென்ட் போன்ற நிறுவனங்களுக்கு பெரும் நன்மை அளிக்கும். ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு செலவு குறைவதால், வீட்டு விலையில் 4-5 சதவீத பங்கு கொண்ட சிமெண்ட், வரி குறைப்பால் 0.40-0.50 சதவீதம் குறையும். இதேபோல் பிற கட்டுமான பொருட்களின் விலையும் குறைய உள்ளது.
நுகர்வோர் பொருட்கள்: உதாரணமாக ஏர் கண்டிஷனர்கள் போன்ற நுகர்வு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறையலாம். இதனால் வோல்டாஸ், ப்ளூ ஸ்டார், அம்பர் மற்றும் ஹாவெல்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு பயன் அளிக்கும்.
இதோடு நுகர்வோர் அத்தியாவசிய பொருட்கள் பிரிவில் டாபர் மற்றும் எமாமி போன்ற ஆயுர்வேத பொருட்கள் 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதத்துக்கு மாறலாம்.
நிதித்துறை: ஜிஎஸ்டி வரி குறைப்பால் மக்கள் மத்தியில் நுகர்வு மற்றும் கடன் தேவை அதிகரிக்கும். இது நிதி துறை நிறுவனங்களுக்கு ஜாக்பாட் ஆகும். இதன் மூவம் நிதியாண்டின் இரண்டாம் பாதியில் இந்திய சந்தையில் கடன் சேவை இரட்டை இலக்க வளர்ச்சியை பதிவு செய்யலாம் என்று மோதிலால் ஓஸ்வால் கணித்துள்ளது.
இதன் மூலம் ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி மற்றும் ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கி போன்ற முன்னணி வங்கிகளுக்கு பெரிய அளவில் பயன் அளிக்கும்.
40 நிறுவனங்களின் மொத்த லிஸ்ட்:
ஆட்டோமொபைல்: மாருதி சுசூகி, டாடா மோட்டார்ஸ், அசோக் லேலண்ட், பஜாஜ், ஹீரோ, டிவிஎஸ், ஐச்சர், மஹிந்திரா, எஸ்கார்ட்ஸ்
நுகர்வு பொருட்கள்: வோல்டாஸ், ஹாவெல்ஸ், ப்ளூ ஸ்டார், அம்பர், வர்ல்பூல், HUL, பிரிட்டானியா, டாபர், எமாமி, ITC, வருண் பெவரேஜஸ், பதஞ்சலி ஃபுட்ஸ்
சிமெண்ட்: அல்ட்ராடெக், JK சிமென்ட்
நிதித்துறை: ஐசிஐசி வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ்
இன்சூரன்ஸ் துறை: நிவா பூபா, மேக்ஸ் லைஃப், HDFC லைஃப், ஸ்டார் ஹெல்த்
ரீடைல்: ரிலாக்ஸோ, ஷாப்பர்ஸ் ஸ்டாப், டிரெண்ட், வேதாந்த் ஃபேஷன், பாடா, மெட்ரோ
ஹோட்டல்: லெமன் ட்ரீ, இந்தியன் ஹோட்டல்ஸ், Chalet
மற்றவை: Delhivery, ஸ்விக்கி, இடர்னல், டைடன்
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications