மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான 57வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் நிதியமைச்சர்கள், அரசின் பிரதிநிதிகள், அதிகாரிகள், முக்கிய தலைவர் முன்னிலையில் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தக் கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி விகிதங்களில் பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவும் இருக்காது என்றாலும் ஜிஎஸ்டி நடைமுறைகள் மற்றும் கட்டமைப்பு சார்ந்த சீர்திருத்தங்களுக்குச் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் முக்கியமாக வரி ரீஃபண்ட் நடைமுறைகள், இன்புட் டிாக்ஸ் கிரெடிட் தொடர்பான நடைமுறைகளை எளிமைப்படுத்தவும், வேகப்படுத்தவும் திருத்தங்கள் கொண்டு வரப்பட உள்ளதாகத் தெரிகிறது.
இந்த 57வது ஜிஎஸ்டி கூட்டம் முக்கியமான மாற்றத்தைக் குறிப்பதாக Nexdigm-ன் உயர் தலைவரான பிரபாத் ரஞ்சன் தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் வரி விதிப்பில் மாற்றங்கள் தொடர்பான முக்கியத்துவம் கொடுக்காமல் ஜிஎஸ்டி அமைப்பில் இருக்கும் பிரச்சனைகளைச் சரி செய்யும் ஒரு கட்டமைப்பு திருத்த நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளது.
மேலும் ஜிஎஸ்டி பதிவு, வரி ரீஃபண்ட, ரிட்டன், ease of doing business போன்றவற்றில் அதிகம் கவனம் செலுத்தப்படுவதால் இது ஜிஎஸ்டி 2.0 பாதையை நோக்கிச் செல்வதாகத் தெரிவித்துள்ளார். இதேபோல் ஜிஎஸ்டி கவுன்சில் இனி வரும் வரி மாற்றங்கள் அனைத்தும் வருடத்திற்கு ஒரு முறை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைப்படுத்தப்படும் வகையில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதனால் வரி விதிப்பில் ஒரு தெளிவு கிடைக்கும் எனவும் நம்பப்படுகிறது.
மேலும் இக்கூட்டத்தில் ஜிஎஸ்டி ரீபண்ட் கிடைப்பதை வேகப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது. தற்போது ரீபண்ட் கிடைப்பதற்கு 25 நாள் ஆகும் வேளையில் 90 சதவீத ரீபண்ட் சில நாட்களிலேயே கிடைக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட உள்ளது. மேலும் ரீபண்ட் தொகையை ஆட்டோமேட்டிக் முறையில் கிடைக்கும் வழிவகை செய்ய நடவடிக்கைகள் இக்கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளது.
மேலும் இக்கூட்டத்தில் retreaded tractor tyre மீதான வரியை 5 சதவீதமாக மாற்றவும், psyllium விதைகளை ஜீரோ ஜிஎஸ்டி வரி பிரிவில் சேர்க்கவும் ஆலோசனை செய்யப்பட உள்ளது. இதோடு 7 அரிய நோய்களுக்கான மருந்து மீதான ஜிஎஸ்டியை ஜீரோவாக அறிவிக்கவும் ஆலோசனை செய்யப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications