ஜிஎஸ்டி கவுன்சிலின் 50வது கூட்டம் இன்று டெல்லியில் விக்யான் பவனில் துவங்கிய நிலையில் XUV கார் மீதான செஸ், கேன்சர் மருந்து மீதான வரி விதிப்பு, ஆன்லைன் கேமிங் மீதான வரி ஆகியவை குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. இக்கூட்டத்தின் முடிவுகளுக்காக காத்திருக்கும் வேளையில் மத்திய நிதியமைச்சகம் 50வது ஜிஎஸ்டி கூட்டத்தை கொண்டாடும் வகையில் ஒரு குறும்படம் மற்றும் ஸ்டாம்ப் வெளியிட்டு உள்ளது.
டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலின் 50வது கூட்டத்தையொட்டி, 'GST Council - 50 steps towards a Journey' என்ற பெயரில் குறும்படத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இந்த வீடியோ மத்திய நிதியமைச்சகத்தின் டிவிட்டர் கணக்கில் அப்லோடு செய்யப்பட்டு உள்ளது.
இதோடு 50வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் போது சிறப்பு கவர் மற்றும் இந்த நிகழ்வுக்காகவே உருவாக்கப்பட்ட ஸ்டாம்-ஐ மத்திய நிதியமைச்சர் வெளியிட்டார். இந்த சிறப்பு ஸ்டாம்-ஐ டெல்லி தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் நிதியமைச்சருக்கு நேரில் கொடுத்தார்.
50வது ஜிஎஸ்டி கூட்டத்தின் போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அலுவலகத்தின் ட்விட்டர் பக்கத்தில், 50வது கூட்டம் கூட்டுறவு கூட்டாட்சியின் வெற்றி மற்றும் எளிமையான வரி ஆட்சியை நிறுவியதற்கான ஒரு மைல்கல் என டிவிட் செய்யப்பட்டு உள்ளது. 50 வது கூட்டத்திற்கு முன்பு, ஜிஎஸ்டி கவுன்சில் இதுவரை நடந்த 49 கூட்டங்களை தோராயமாக 1500 முடிவுகளை எடுத்துள்ளது.

இந்த 50வது சிறப்பு மிக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தவிர, மத்திய நிதியமைச்சகத்தின் மாநில அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்கள், சஞ்சய் மல்ஹோத்ரா, CBIC தலைவர் விவேக் ஜோஹ்ரி, மத்திய வருவாய் துறை, GSTPW & GSTN, CBIC அமைப்பின் குழு உறுப்பினர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்தியாவில் மிகப்பெரிய மறைமுக வரிச் சீர்திருத்தமான சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டு ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் ஒவ்வொரு மாதமும் 1.5 லட்சம் கோடி ரூபாய் எட்டி வரும் நிலையில் இது புதிய இயல்பான நிலையாக மாறியுள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications