மத்திய நிதியமைச்சகம் செப்டம்பர் 2020ல் இருந்து தொடர்ந்து பல்வேறு நெருக்கடியான சூழ்நிலையிலும், கொரோனா தொற்று மற்றும் லாக்டவுன் மூலம் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்ட வேளையிலும் ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி வரி வசூல் மூலம் தொடர்ந்து 1 லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமாகப் பெற்று வந்ததைப் பெருமையாகக் கூறி வந்தது.
ஆனால் கொரோனா தொற்று அலை 2வது அலையில் மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், நாட்டின் வர்த்தகம் மற்றும் வருவாய் பாதிப்பு ஏற்பட்ட காரணத்தால் ஜூன் மாதத்தின் ஜிஎஸ்டி வசூல் சரிந்துள்ளது.
கொரோனா தொற்று
இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையிலும் நாடு முழுவதும் லாக்டவுன் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளைப் படிப்படியாகக் குறைந்து வரும் காரணத்தால் ஜூலை மாத ஜிஎஸ்டி வரி வசூல் மீண்டும் 1 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டும் என மிகவும் நம்பிக்கையாக உள்ளது மத்திய நிதியமைச்சகம்.
மத்திய நிதியமைச்சகம்
மத்திய நிதியமைச்சகம் கடந்த 9 மாதத்தில் முதல் முறையாக 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் குறைவான வரியை வசூலித்துள்ளது. ஜூன் மாதத்தில் ஜிஎஸ்டி மூலம் சுமார் 92,849 கோடி ரூபாய் அளவிலான வரியை வருமானமாகப் பெற்றுள்ளது.
ஜிஎஸ்டி வரி வசூல்
ஜூன் மாதத்தில் பெற்ற 92,849 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூலில், CGST பிரிவில் 16,424 கோடி ரூபாயும், SGST பிரிவில் 20,397 கோடி ரூபாயும், IGST பிரிவில் 49,079 கோடி ரூபாயும், செஸ் மூலம் 6,949 கோடி ரூபாயும் ஜூன் மாதம் மத்திய அரசு வரி வருமானமாகப் பெற்றுள்ளது.
2 சதவீதம் அதிகம்
ஜூன் 2021ல் ஜிஎஸ்டி வரி வசூல் 1 லட்சம் கோடி ரூபாய்க்குக் குறைவாக இருந்தாலும், கடந்த வருடத்தின் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் 2 சதவீதம் அதிகமாகும். மேலும் இக்காலகட்டத்தில் மத்திய நிதியமைச்சகம் வரி செலுத்துவோருக்கும், அபராதம் விதிப்பிலும் பல்வேறு சலுகைகள் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications