மத்திய அரசு பிப்ரவரி 1 ஆம் தேதி வெளியிட்ட பட்ஜெட் அறிக்கையில் பல்வேறு வரி சலுகை மற்றும் அதிகளவிலான மூலதன திட்டங்களை அறிவித்த வேளையில் அரசுக்கு நிதி தேவை பெரிய அளவில் தேவைப்பட்டது. இந்த நிலையில், வர்த்தக பற்றாக்குறையை தொடர்ந்து சாதகமான அளவில் கட்டுப்படுத்தப்படும் என உத்தரவாதம் அளித்தது.
இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் மொத்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் வருடாந்திர அடிப்படையில் சுமார் 12% அதிகரித்து 1,49,577 கோடி ரூபாயாக உள்ளது.
இதன் மூலம், மத்திய அரசு தொடர்ந்து 12 மாதங்களுக்கு மாதாந்திர ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.4 லட்சம் கோடிக்கு மேல் கொண்டு சாதனை படைத்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 2022
பிப்ரவரி 2022 இல் இந்தியாவின் ஜிஎஸ்டி வருவாய் 1,33,026 கோடி ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 12 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் மாதாந்திர அடிப்படையில் ஜிஎஸ்டி வரி வசூல் குறைந்துள்ளது. ஜனவரி 2022ல் ஜிஎஸ்டி வருவாய் 1.57 லட்சம் கோடி ரூபாயாக இருந்து குறிப்பிடத்தக்கது.
ஜிஎஸ்டி வரி வசூல்
2023 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் மொத்த சரக்கு மற்றும் சேவை வரி வசூல் 1,49,577 கோடி ரூபாயாக இருக்கும் நிலையில், வசூலான மொத்த வருவாயில், சிஜிஎஸ்டி ரூ.27,662 கோடி, எஸ்ஜிஎஸ்டி ரூ.34,915 கோடி, ஐஜிஎஸ்டி ரூ.75,069 கோடி (பொருட்களின் இறக்குமதி மூலம் ₹35,689 கோடி வரி உட்பட), செஸ் ரூ.11,931 கோடி (இறக்குமதி பொருட்கள் மீதான ரூ.792 கோடி செஸ் உட்பட).
இறக்குமதி
பிப்ரவரி மாதத்தில், வெளிநாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட சரக்குகளின் மூலம் கிடைத்த வரி வருமானம் 6 சதவீதம் அதிகரித்துள்ளது. இதோடு உள்நாட்டு பரிவர்த்தனையின் (சேவைகளின் இறக்குமதி உட்பட) வருவாய் கடந்த ஆண்டு விட 15% அதிகமாகவும் உள்ளது.
செஸ் வரி வசூல் சாதனை
பிப்ரவரி மாதம் அதிகப்படியான செஸ் வசூல் பதிவு செய்துள்ளது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதில் இருந்து அதிகப்படியான செஸ் வரி வசூல் பிப்ரவரி 2023ல் பதிவாகியுள்ளது புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது. பிப்ரவரி மாதம் மட்டும் 11,931 கோடி ரூபாயை செஸ் வரியாக கிடைத்துள்ளது என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் காலாண்டு
ICRA இன் தலைமைப் பொருளாதார நிபுணர் அதிதி நாயர் கூறுகையில், பிப்ரவரி 2023 இல் ஜிஎஸ்டி வசூலில் மாதாந்திர அடிப்படையில் சரிவு ஏற்பட்டு உள்ளது. டிசம்பர் மாதத்திற்கான காலாண்டு முடிவில் இருந்து ஜனவரி வரி வசூல் அளவு அதிகரிக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது என தெரிவித்துள்ளது.
பட்ஜெட் அறிக்கை
பிப்ரவரி 1 ஆம் தேதி 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அரசின் நிகர ஜிஎஸ்டி வசூலில் 12% வளர்ச்சி இருக்கும் என்று கணித்தார். 2022-23 க்கு மத்திய அரசு ஜிஎஸ்டி வரி வசூல் 8.54 லட்சம் கோடியாக இருக்கும் என இலக்கு வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
விவேக் ஜோஹ்ரி
மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் (சிபிஐசி) தலைவர் விவேக் ஜோஹ்ரி, சமீபத்தில் ஜிஎஸ்டி வசூலில் ரூ. 1.5 லட்சம் கோடி என்பது புதிய இயல்பான நிலையாக மாறிவிட்டதாக தெரிவித்தார். அடுத்த ஆண்டில் இந்த எண்ணிக்கையைத் தாண்டும் என்று வாரியம் நம்புவதாகவும் கூறினார்.
வரி குறைப்பு அமல்
கடந்த வாரம் டெல்லி விஞ்ஞான் பவனில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சிலின் 49வது கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட பென்சில் ஷார்பனர், ராப், டேக் ட்ராக்கிங் பொருட்கள் மீதான வரி குறைப்பு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications