ஜிஎஸ்டி வசூலில் தடாலடி உயர்வு.. 2வது உச்ச அளவீட்டை தொட்டது..!!

மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி வசூலில் மீண்டும் சாதனை வசூல் அளவீட்டைத் தொட்டு உள்ளது. 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 1.78 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வரியை வசூலிக்கப்பட்டுள்ளது. ஜூலை 2017 இல் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதில் இருந்து இது இரண்டாவது அதிகப்படியான வசூல் தொகையாகும்.

2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் அளவை காட்டிலும் 12.5 சதவீதம் வளர்ச்சி கண்டு உள்ளது, பிப்ரவரி மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.70 லட்சம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து தற்போது 2வது சாதனை அளவீட்டை மார்ச் மாத 1.78 லட்சம் கோடி ரூபாய் வசூல் அளவு பதிவு செய்துள்ளது.

ஜிஎஸ்டி வசூலில் தடாலடி உயர்வு.. 2வது உச்ச அளவீட்டை தொட்டது..!!

மார்ச் மாத வரி வசூல் உயர்வுக்கு முக்கியமான காரணம் உள்நாட்டு பரிவர்த்தனைகளில் இருந்து வரும் ஜிஎஸ்டி வரி வசூல் 17.6 சதவீதம் உயர்ந்தது தான் என்று மத்திய நிதி அமைச்சகம் திங்கட்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

மார்ச் மாதத்தில் திருப்பிச் செலுத்தப்பட்ட ஜிஎஸ்டி, முந்தைய ஆண்டை விட 18.4 சதவீதம் உயர்ந்து ரூ.1.65 லட்சம் கோடியாக உள்ளது. 2023-24 நிதி ஆண்டிற்கான மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.20.14 லட்சம் கோடியாக 11.7 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டில் ரூ.1.50 லட்சம் கோடியாக இருந்த மாதாந்திர சராசரி ஜிஎஸ்டி வசூல், 2024 ஆம் நிதியாண்டில் ரூ.1.68 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜிஎஸ்டி அமைப்பு முறை படிப்படியாக வலுப்பெற்று வருகிறது என்பதையே இந்த வரி வசூல் அதிகரிப்பு எடுத்துக் காட்டுகிறது. வரி ஏய்ப்பு நடவடிக்கைகளைக் கடுமையாக்குவதன் மூலமும், வரி செலுத்துவதை எளிமைப்படுத்துவதன் மூலமும், வரி வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று வரி நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மார்ச் 2024 மாத ஜிஎஸ்டி வரி வசூல் குறித்த மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டின் படி, மொத்தமாக ஜிஎஸ்டி வசூல் தொகை ரூ.1.78 லட்சம் கோடி. இதில் மத்திய ஜிஎஸ்டி (CGST) ரூ.34,532 கோடி, மாநில ஜிஎஸ்டி (SGST) ரூ.43,746 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (IGST) ரூ.87,947 கோடி. இதில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மீதான வரி ரூ.40,322 கோடி அடங்கும். இது தவரி செஸ் வரி பிரிவில் ரூ.12,259 கோடி, இதில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மீதான வரி ரூ.996 கோடி அடங்கும்.

மொத்த ஜிஎஸ்டி வரி வசூலில், CGST மற்றும் SGST வரி வகைகள் உள்நாட்டு விற்பனை மீதான வரிகளாகும். IGST வரி என்பது மாநிலங்களுக்கு இடையேயான விற்பனைக்கும், இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மீதும் விதிக்கப்படும் வரியாகும். இந்த வரி மாநிலங்களுக்கு பிரித்து அளிக்கப்படும்.

ஏப்ரல் 2023 மாதத்தில் ரூ.1.87 லட்சம் கோடி என்ற ஜிஎஸ்டி வரி வசூல் சாதனை படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 2வது உச்ச அளவீட்டை மார்ச் 2024 மாத ஜிஎஸ்டி வரி வசூலான ரூ.1.78 லட்சம் கோடி தொட்டு உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+