டெல்லி: இந்தியாவில் அடுத்த 5 வருடம் யார் ஆட்சி செய்யப்போவது என்ற பெரும் போட்டியில் தேர்தல் நடந்து வரும் வேளையில் மத்தியில் இருக்கும் நரேந்திர மோடி அரசுக்கு சாதகமாக ஒரு அறிவிப்பு வந்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூலில் சாதனை படைக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டின் ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது, 12.4 சதவீத உயர்வுடன், ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.2.10 லட்சம் கோடி அளவீட்டை தொட்டு உள்ளது.

இந்த வரி வசூலில் திருப்பிச் செலுத்தப்பட்ட வரி தொகையைக் கழித்த பின்னர் ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.1.92 லட்சம் கோடியாக உள்ளது. இதுவும் கடந்த ஆண்டின் அதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 17.1 சதவீதம் அதிகமாகும்.
நரேந்திர மோடி தலைமையிலான அரசு நாட்டின் மறைமுக வரி விதிப்பை மொத்தமாக மாற்றிய பின்னர், வரி ஏய்ப்பு அதிகமாக இருந்த காரணத்தால் ஆரம்பக்காலத்தில் இழப்புகளை எதிர்கொண்டது. ஆனால் ஜிஎஸ்டி அமைப்பின் அதிரடி சோதனைகள் மற்றும் கட்டுப்பாடுகள் மூலம் வரி ஏய்ப்பு தடுக்கப்படுகிறது.
இதேவேளையில் நாட்டின் வர்த்தகம், உற்பத்தி, ஏற்றுமதியும் தொடர்ந்து விரிவடையும் காரணத்தால் ஜிஎஸ்டி வரி வசூல் நிலையான வளர்ச்சியை பதிவு செய்து தற்போது ரூ.2.10 லட்சம் கோடி என்ற வரலாற்று உச்ச அளவீட்டை தொட்டு உள்ளது.
நிதி அமைச்சகத்தின் தகவல்படி, உள்நாட்டு பரிவர்த்தனைகள் (13.4 சதவீதம் அதிகரிப்பு) மற்றும் இறக்குமதி (8.3 சதவீதம் அதிகரிப்பு) ஆகியவற்றில் ஏற்பட்ட வலுவான வளர்ச்சியே ஜிஎஸ்டி வரி வருவாய் அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக இருந்தது என தெரிவித்துள்ளது.
மத்திய ஜிஎஸ்டி (CGST) வரி வருவாய் ரூ.43,846 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி (SGST) வரி வருவாய் ரூ.53,538 கோடியாகவும் இருந்ததாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (IGST) வரி வருவாய் ரூ.99,623 கோடியாக இருந்தது, இதில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மீது வசூலிக்கப்பட்ட ரூ.37,826 கோடி சேர்க்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மீது வசூலிக்கப்பட்ட ரூ.1,008 கோடி உட்பட, மொத்த செஸ் வரி வருவாய் ரூ.13,260 கோடியாக இருந்தது.
ஏப்ரல் மாதத்தில், மத்திய அரசு வசூலித்த ஜிஎஸ்டி வரியில் இருந்து, ரூ.50,307 கோடியை மத்திய ஜிஎஸ்டிக்கும் (CGST), ரூ.41,600 கோடியை மாநில ஜிஎஸ்டிக்கும் (SGST) செலுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம், மொத்த ஜிஎஸ்டி வருவாய், மத்திய ஜிஎஸ்டிக்கு (CGST) ரூ.94,153 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டிக்கு (SGST) ரூ.95,138 கோடியாகவும் உயர்ந்துள்ளது.
ஜிஎஸ்டி வரி வசூலில் மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தரபிரதேசம், குஜராத் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்கள் முறையே 13 சதவீதம், 9 சதவீதம், 19 சதவீதம், 13 சதவீதம் மற்றும் 23 சதவீதம் வளர்ச்சியைக் கண்டுள்ளது. தமிழ்நாட்டில் வரி வசூல் 6 சதவீதம் உயர்வு.
அதே சமயம், ஜம்மு காஷ்மீர் (-2 சதவீதம்), சிக்கிம் (-5 சதவீதம்), அருணாச்சல பிரதேசம் (-16 சதவீதம்), நாகாலாந்து (-3 சதவீதம்), மேகாலயா (-2 சதவீதம்), லட்சத்தீவு (-57 சதவீதம்), மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் (-30 சதவீதம்) ஆகிய மாநிலங்களில் ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications