டிசம்பர் மாதத்திலும் கல்லா கட்டிய மத்திய அரசு... ஜிஎஸ்டி வசூல் ரூ.1,49,507 கோடி!

டிசம்பர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி வருவாய் குறித்தான அறிவிப்பினை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, 11வது முறையாக ஜிஎஸ்டி வசூல் 1.4 கோடி ரூபாயினை கடந்து சாதனை கண்டுள்ளது.

இது கடந்த டிசம்பர் மாதத்தில் 1,49,507 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 15% வளர்ச்சியினை கண்டுள்ளதாக நிதியமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்டி வரி வருவாய்

ஜிஎஸ்டி வரி வருவாய்


மத்திய நிதி அமைச்சகம் ஞாயிற்றுகிழமையன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, டிசம்பர் மாதம் மொத்தம் ஜிஎஸ்டி வரி வருவாயானது 1,49,507 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதில் மத்திய அரசின் சரக்கு சேவை வரி (CGST) வருவாயாக 26,711 கோடி ரூபாயும், இதே மாநில அரசுகளின் சரக்கு சேவை வரி (SGST) வருவாயாக 33,357 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. மொத்தம் மத்திய மாநில அரசுகளின் வரி விகிதம் சேர்த்து, 78,434 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு மாதமும் அதிகம்

ஒவ்வொரு மாதமும் அதிகம்

செஸ் வரி வருவாயாக 11,005 கோடி ரூபாயாகவும் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதே கடந்த ஏப்ரல் 2022 தொடங்கி டிசம்பர் 2022 வரையிலான காலகட்டத்தில் ஒவ்வொரு மாதமும் முந்தைய ஆண்டினை காட்டிலும் ஜிஎஸ்டி வசூலானது அதிகரித்து சாதனை படைத்துள்ளது.

ஏப்ரல் - டிசம்பர் வரையில் என்ன நிலவரம்?

ஏப்ரல் - டிசம்பர் வரையில் என்ன நிலவரம்?

ஏப்ரல் 2022 - ரூ.1,67,540 கோடி

ஏப்ரல் 2021 - ரூ.1,39,708 கோடி

மே 2022- ரூ.1,40,885 கோடி

மே 2021 - ரூ.97,821 கோடி

ஜூன் 2022- ரூ.1,44,616 கோடி

ஜூன் 2021 - ரூ.92,800 கோடி

ஜூலை 2022 - ரூ.1,48,995 கோடி

ஜூலை 2021 - ரூ.1,16,393 கோடி

ஆகஸ்ட் 2022 - ரூ.1,43,612 கோடி

ஆகஸ்ட் 2021 - ரூ.1,12,020 கோடி

செப்டம்பர் 2022 - ரூ.1,47,686 கோடி

செப்டம்பர் 2021 - ரூ.1,17,010 கோடி

அக்டோபர் 2022 - ரூ.1,51,718 கோடி

அக்டோபர் 2021 - ரூ.1,30,127 கோடி

நவம்பர் 2022 - ரூ.1,45,867 கோடி

நவ்ம்பர் 2021 - ரூ.1,31,526 கோடி

டிசம்பர் 2022 - ரூ.1,49,507 கோடி

டிசம்பர் 2021 - ரூ.1,29,780 கோடி

மத்திய அரசு/ மாநில அரசு

மத்திய அரசு/ மாநில அரசு

கடந்த ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வசூலானது வரலாறு காணாத அளவுக்கு, 1.68 லட்சம் கோடி ரூபாயினை எட்டியிருந்தது. அதன் பிறகு அந்த லெவலை எட்டவில்லை என்றாலும், தொடர்ந்து முந்தைய ஆண்டினை காட்டிலும் அதிகளவிலேயே இருந்து வருகின்றது.

இதற்கிடையில் மத்திய அரசு 36,669 கோடி ரூபாயினை CGST-க்கும், 31,094 கோடி ரூபாயினை SGST-க்கும் பகிர்ந்து அளித்துள்ளது.

இவே பில்கள்

இவே பில்கள்

இதற்கிடையில் கடந்த நவம்பர் மாதத்தில் 7.9 கோடி இவே பில்கள் உருவாக்கப்பட்டது. இது 2022 அக்டோபரில் 7.6 கோடி இவே பில்கள் உருவாக்கப்பட்டது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+