டெல்லி: கடந்த மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் விகிதம் 1.23,902 கோடி ரூபாயாக வசூலாகியுள்ளது.
ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இது தான் அதிக வசூல் என்றும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஆண்டு மார்ச் மாத வசூலுடன் ஒப்பிடும்போது இது 27% அதிகம் என தெரிவித்துள்ளது.

இது கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பொருளாதாரம் மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், இந்த வசூல் சாதனையை படைத்துள்ளது. இது கடந்த பிப்ரவரி மாத வசூலுடன் ஒப்பிடும்போது 10,000 கோடி ரூபாய் அதிகமாகும். கடந்த பிப்ரவரியில் 1.13 லட்சம் கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த ஜிஎஸ்டி வசூலில் மத்திய ஜிஎஸ்டி 22,973 கோடி ரூபாயும், மாநில ஜிஎஸ்டி 29,329 ரூபாயும் கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி 62,842 கோடி ரூபாயும் அடங்கும் (இதில் இறக்குமதி வரியாக 31,097 கோடி ரூபாயும் அடங்கும்). இவற்றோடு செஸ் வரி 8,757 கோடி ரூபாயும் வசூலாகியுள்ளது. இதிலும் 935 கோடி ரூபாய் இறக்குமதி மீதான செஸ் வரியாகும்.
கடந்த மார்ச் மாதத்தில் இறக்குமதியின் மூலம் வசூலான வரி 70% அதிகமாகும். இதே உள்நாட்டு வர்த்தக நடவடிக்கைகள் இறக்குமதிகள் கடந்த ஆண்டு இதே மாத வசூலை விட 17% அதிகமாகும்.
கடந்த 6 மாதங்களாக 1 லட்சம் கோடியை சீராக கடந்துள்ள ஜிஎஸ்டி வரி வசூல், கொரோனா காலகட்டத்திலும் பொருளாதார வளர்ச்சியை காட்டுவதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications