டெல்லி: கடந்த ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் விகிதம் 1.41,384 கோடி ரூபாயாக வசூலாகியுள்ளது.
ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இது தான் அதிக வசூல் என்றும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்ச்சியாக ஏழாவது மாதமாக 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேலாக வசூலாகியுள்ளது.

இது குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஆண்டு மார்ச் மாத வசூலுடன் ஒப்பிடும்போது, ஏப்ரல் மாதத்தில் 14% அதிகம் என தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 2021 மாதத்தில் 1.23 லட்சம் கோடி ரூபாயாக வசூலாகியிருந்தது.
ஏப்ரல் மாதத்தில் வசூலாகியுள்ள இந்த ஜிஎஸ்டி வசூலில் மத்திய ஜிஎஸ்டி 27,837 கோடி ரூபாயும், மாநில ஜிஎஸ்டி 35,621 கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி 68,481 கோடி ரூபாயும் அடங்கும் (இதில் இறக்குமதி வரியாக 29,599 கோடி ரூபாயும் அடங்கும்). செஸ் வரி 9,445 கோடி ரூபாயும் வசூலாகியுள்ளது. இதிலும் 981 கோடி ரூபாய் இறக்குமதி மீதான செஸ் வரியாகும்.
தற்போது நாட்டில் இரண்டாம் கட்ட கொரோனா பரவல் என்பது விஸ்வரூபம் எடுத்து ஆடி வரும் நிலையில், இந்தியாவில் வணிகம் பாதிக்கப்பட்டு வருகின்றது. எனினும் கடந்த ஆண்டை காட்டிலும் அந்தளவுக்கு இல்லை. மேலும் கடந்த ஆண்டில் முழு லாக்டவுன் அமலபடுத்தப்பட்டது. ஆனால் இந்த ஆண்டில் அந்த நிலை இல்லை. ஆக தற்போது வணிக வளர்ச்சி விகிதம், பொருளாதார வளர்ச்சி விகிதமானது இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது. அதோடு தற்போது கொரோனா தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக விரைவில் நாடு இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனாவின் இரண்டாம் கட்ட பரவலுக்கு மத்தியிலும், நிறுவனங்கள் நன்றாக செயல்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications