டெல்லி: கடந்த செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி 95,480 கோடி ரூபாயாக வசூலாகியுள்ளது.
இது குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி 95,480 கோடி ரூபாயாக வசூலாகியுள்ளது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தை விட 10.4 சதவீதமும், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தை விட 4 சதவீதமும் அதிகம்.
கடந்த மாத ஜிஎஸ்டி வசூலில் மத்திய ஜிஎஸ்டி 17,741 கோடி ரூபாயும், மாநில ஜிஎஸ்டி 23,131 ரூபாயும் கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி 47,484 கோடி ரூபாயும் மற்றும் இறக்குமதி வரி 22,442 கோடி ரூபாயும் அடங்கும். இவற்றோரு செஸ் வரி 7,124 கோடி ரூபாயும் வசூலாகியுள்ளது.

இதில் இறக்குமதி வரி 788 கோடி ரூபாயும் அடங்கும். ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வசூலில் மத்திய ஜிஎஸ்டிக்கு 21260 கோடி ரூபாயும், மாநில ஜிஎஸ்டிக்கு 16,997 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.
இதே கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி வசூலானது 86,449 கோடி ரூபாயாகும். இதே ஜூலை மாதத்தில் 87,422 கோடி ரூபாயும், ஜூன் மாதத்தில் 90,917 கோடி ரூபாயும், கடந்த மே மாதத்தில் 62,151 கோடி ரூபாயும் வசூலாகியுள்ளது. இது கடந்த ஏப்ரல் மாதத்தில் வெறும் 32,172 கோடி ரூபாய் மட்டுமே வசூலாகியுள்ளது.

கடந்த மார்ச் மாத இறுதியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, மத்திய அரசு நாடு தழுவிய லாக்டவுனை அமல்படுத்தியது. இதன் காரணமாக பொருளாதார வளர்ச்சி குறித்ததான அனைத்து நடவடிக்கைகளும் முற்றிலும் முடங்கின. இதனால் மத்திய மா நில அரசுகளுக்கு கிடைக்க வேண்டிய வரி வருவாயும் முடங்கி போயின. இதனால் அரசு பலத்த நிதி பற்றாக்குறையினையும் சந்தித்து வருகின்றது.
இதற்கிடையில் மாநில அரசுகளுக்கு கொடுக்க வேண்டிய நிதியினை கொடுக்க வேண்டும் என பல மாநில அரசுகளும், மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றன.

பெரும்பாலான மாநிலங்கள் மத்திய அரசின் ஆலோசனையின்படி, ரிசர்வ் வங்கி மூலம் பணத்தை கடனாக பெறுதல் முறையும், ஜிஎஸ்டி இழப்பீட்டு காலத்தை நீட்டிப்பதன் மூலம் கடனை திருப்பிச் செலுத்த ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால் இதற்கு பல எதிர்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும், சில மாநிலங்கள் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இழப்பீட்டு காலத்தை அதிகரிக்க முன்மொழிந்துள்ளன. அதே நேரத்தில், இழப்பீடு தொடர்பான விஷயமும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், ஜிஎஸ்டி கூட்டம் அக்டோபர் 5-ம் தேதி (நாளை) நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications