டெல்லி: மத்திய நிதியமைச்சகம், இந்த ஜூலை மாதத்தில் சுமார் 1.65 லட்சம் கோடி ரூபாய் அளவிலான சரக்கு மற்றும் சேவை வரியை வசூலித்துள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இது 11% வளர்ச்சியாகும். ஐந்தாவது முறையாக, 1.60 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஜிஎஸ்டி தொகை வசூலாகியுள்ளது.
ஜூலை மாதத்தில் உள்நாட்டு பரிவர்த்தனைகள் மூலம் கிடைத்த வருவாய் கடந்த ஆண்டின் இதே ஜூலை மாதத்தோடு ஒப்பிடுகையில் 15% அதிகமாகும், இதில் சேவைகளின் இறக்குமதிகள் மூலம் கிடைக்கும் வரி வருவாயும் அடக்கம் என்று நிதி அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மத்திய நிதியமைச்சகம், ஜூலை மாதத்தில் வசூலித்த மொத்த 1.65 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூலில், CGST எனப்படும் மத்திய ஜிஎஸ்டி 29,773 கோடி ரூபாய், SGST எனப்படும் மாநில ஜிஎஸ்டி 37,623 கோடி ரூபாய், IGST எனப்படும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி 85,930 கோடி ரூபாய் ஆகும். இதில் சரக்கு இறக்குமதி மூலம் வசூலான 41,239 கோடி ரூபாயும் அடக்கம்.
ஜூலை மாதத்தில் சரக்கு இறக்குமதி மூலம் வசூல் செய்யப்பட்ட 840 கோடி ரூபாய் உட்பட, இந்த மாதத்திற்கான மொத்த செஸ் வசூல் 11,779 கோடி ரூபாயாகும். ஐஜிஎஸ்டியில் இருந்து சிஜிஎஸ்டிக்கு 39,785 கோடி ரூபாயும், எஸ்ஜிஎஸ்டிக்கு 33,188 கோடி ரூபாயும் மத்திய அரசு செட்டில்மென்ட் செய்துள்ளது.
மத்திய அரசு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி 85,930 கோடி ரூபாய் பிரித்த பிறகு ஜூலை 2023 இல் மத்திய அரசின் மொத்த வருவாயாக CGST கீழ் 69,558 கோடி ரூபாயும், மாநில அரசுகளின் மொத்த வருவாயாக SGST கீழ் 70,811 கோடி ரூபாயும் பெற்றுள்ளது.
இந்த நிலையில் அடுத்த 2 அல்லது 3 மாதத்திற்கு நாடு முழுவதும் விழாகாலம் என்பதால் மக்கள் கார், வீடு, பைக், சுற்றுலா என மக்கள் அதிகப்படியாக செலவுகளை செய்வார்கள். இதன் மூலம் அடுத்த 2 அல்லது 3 மாதத்திற்கு ஜிஎஸ்டி வரி வசூல் 1.75 லட்சம் கோடி ரூபாய் வரையில் உயர்ந்து மிகப்பெரிய சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை மாதத்தில் மாநில வாரியாக ஜிஎஸ்டி வரி வசூல் அளவீடு, தமிழ்நாடு 3வது இடம். ஜிஎஸ்டி வசூலில் ஹிமாச்சல பிரதேசம் மற்றும் சண்டிகர் வருடாந்திர அடிப்படையில் சுமார் 23 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் 27 சதவீத வளர்ச்சி, டெல்லி 25 சதவீத வளர்ச்சி, தமிழ்நாடு 19 சதவீத வளர்ச்சி, மகாராஷ்டிரா 18 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது.
மகாராஷ்டிரா - 26,064 கோடி ரூபாய்
கர்நாடகா - 11,505 கோடி ரூபாய்
தமிழ்நாடு - 10,022 கோடி ரூபாய்
குஜராத் - 9,787 கோடி ரூபாய்
உத்தரபிரதேசம் - 8,802 கோடி ரூபாய்
ஹரியானா - 7,953 கோடி ரூபாய்
டெல்லி - 5,405 கோடி ரூபாய்
மேற்கு வங்காளம் - 5,128 கோடி ரூபாய்
தெலுங்கானா - 4,849 கோடி ரூபாய்
ஒடிசா - 4,245 கோடி ரூபாய்
ராஜஸ்தான் - 3,988 கோடி ரூபாய்
ஆந்திரப் பிரதேசம் - 3,593 கோடி ரூபாய்
மத்திய பிரதேசம் - 3,325 கோடி ரூபாய்
ஜார்கண்ட் - 2,859 கோடி ரூபாய்
சத்தீஸ்கர் - 2,805 கோடி ரூபாய்
கேரளா - 2,381 கோடி ரூபாய்
பஞ்சாப் - 2,000 கோடி ரூபாய்
உத்தரகாண்ட் - 1,607 கோடி ரூபாய்
பீகார் - 1,488 கோடி ரூபாய்
அசாம் - 1,183 கோடி ரூபாய்
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications