அக்டோபர் மாதத்திற்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் கடந்த வருடத்தை காட்டிலும் 13 சதவீதம் அதிகரித்து ரூ.1.72 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்று மத்திய நிதி அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அக்டோபர் மாதத்திற்கான வசூல் அளவு 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பதிவான 1.87 லட்சம் கோடி ரூபாய் அளவில் இருந்து இரண்டாவது அதிகபட்சமான அளவாக உருவெடுத்துள்ளது. அக்டோபர் மாதம் தசரா, நவராத்திரி பண்டிகை காரணமாக ரீடைல் வர்த்தகம் டக்கென உயர்ந்தது இதனால் 13 சதவீதம் அதிகரித்து 1.72 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது
அக்டோபர் மாதத்திற்கு முந்தைய மாதமான செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.63 லட்சம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மாதாந்திர ஜிஎஸ்டி வரி வசூல் அளவு தொடர்ச்சியாக எட்டாவது மாதமாக 1.5 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் பதிவாகியுள்ளது.
மேலும் 2023-24 நிதியாண்டின் சராசரியாக மொத்த மாத ஜிஎஸ்டி வசூல் அளவு தற்போது 1.66 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த வருட அளவீட்டை காட்டிலும் 11 சதவீதம் அதிகமாக் எனவும் மத்திய நிதி அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தின் போது உள்நாட்டு பரிவர்த்தனைகளில் சேவைகளின் இறக்குமதியும் சேர்த்து வருடாந்திர அடிப்படையில் 13 சதவீதம் உயர்வுடன் 1.72 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவீட்டை பதிவு செய்துள்ளது.
அக்டோபர் மாதத்தில் வசூலான மொத்த ஜிஎஸ்டி வரியான 1.72 லட்சம் கோடியில், சிஜிஎஸ்டி பங்கீடு ரூ.30,062 கோடியாகவும், எஸ்ஜிஎஸ்டி பங்கிடு ரூ.38,171 கோடியாகவும், ஐஜிஎஸ்டி பங்கீடு ரூ.91,315 கோடியாகவும் உள்ளது.
ஐஜிஎஸ்டியில் இருந்து சிஜிஎஸ்டிக்கு ரூ.42,873 கோடியும், எஸ்ஜிஎஸ்டிக்கு ரூ.36,614 கோடியும் மத்திய அரசு செட்டில் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அடுத்த சில நாட்களில் மத்திய அரசு மாநில அரசுக்கான வரி பங்கீட்டை செட்டில் செய்துவிடும்.


Click it and Unblock the Notifications