இழப்பீடு செஸ் வரி வசூலை ஜிஎஸ்டி கட்டமைப்பில் இணைப்பது குறித்து ஆலோசிக்க மத்திய நிதியமைச்சகத்தின் மாநிலங்களுக்கான அமைச்சரான பங்கஜ் சவுத்ரி தலைமையிலான அமைச்சர்கள் குழு (GoM) புதன்கிழமை கூடியது. இந்த கூட்டத்தில் இழப்பீடு செஸ் வரியை ஜிஎஸ்டி கட்டமைப்பில் இணைப்பது குறித்து ஆய்வு செய்யும் GoM, பல்வேறு மாநிலங்களின் கருத்துகளைப் பெற்றது.
மார்ச் 2026 இல் இழப்பீடு செஸ் வரி விதிப்பு முறை முடிவடையும் வேளையில், அதன் பிறகு அதை ஜிஎஸ்டி உடன் இணைப்பதை மாநிலங்கள் விரும்புகின்றன. இந்த மாற்றத்தின் போது, ஆடம்பரம், பாவம் (Sin) மற்றும் குறைபாடுள்ள பொருட்களின் (Demerit Goods) பட்டியலில் புதிய பொருட்களை சேர்க்கக்கூடாது என்றும் மாநில அரசுகள் வலியுறுத்தின.

அமைச்சர்கள் குழு அனைத்து விருப்பங்களையும் ஆராய்ந்து வருகிறது, அவற்றில் முக்கியமாக இழப்பீடு செஸ் வரியை வழக்கம்போல் தொடர்வது அல்லது தனித்தனி வரியாக மாற்றுவது ஆகியவை விருப்பமும் அடங்கும். கூடுதலாக, ஆடம்பரம், குறைபாடு மற்றும் பாவம் பொருட்களின் பட்டியலை திருத்துவதற்கான வாய்ப்பையும் ஆராயப்படுகிறது.
இழப்பீட்டு இனம் குறித்த GoM-ன் அடுத்த கூட்டம் நவம்பர் இரண்டாம் வாரத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் இழப்பீடு செஸ் விதிப்பு குறித்து முக்கியமான முடிவை எடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.
மேலும் இழப்பீடு செஸ் விதிக்கப்படும் ஆடம்பரம், பாவம் (Sin) மற்றும் குறைபாடுள்ள பொருட்களின் (Demerit Goods) பொருட்களுக்கு தனி வரி பலகையை கொண்டு வரும் வாய்ப்பு குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இழப்பீடு செஸ் வரி வசூலை ஜிஎஸ்டி கட்டமைப்பில் இணைப்பது மூலம் மாநிலங்களுக்கான வரி பகிர்வு பெரிய அளவில் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக மாநிலங்கள் இழப்பீடு செஸ் வரியை ஜிஎஸ்டி உடன் இணைப்பதை வலியுறுத்திகிறது.
இந்த அமைச்சர்கள் குழுவில் அசாம், சத்தீஸ்கர், குஜராத், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களின் உறுப்பினர்கள் உள்ளனர். இந்த குழு தனது அறிக்கையை ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யும்.
ஜிஎஸ்டி கட்டமைப்பில், ஆடம்பரம், பாவம் மற்றும் குறைபாடுள்ள பொருட்களின் மீது 28% வரியைத் தவிர்த்து, கூடுதலான வரியை இழப்பீடு செஸ் வாயிலாக விதிக்கப்படுகிறது. ஜிஎஸ்டி அறிமுகமானதிலிருந்து ஐந்து ஆண்டுகள் அல்லது ஜூன் 2022 வரை முதலில் திட்டமிடப்பட்ட இழப்பீடு செஸ் வரி விதிப்பு மூலம் கிடைக்கும் வருவாய், ஜிஎஸ்டி அறிமுகமானதால் மாநிலங்களுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுசெய்ய பயன்படுத்தப்பட்டது.
2022 ஆம் ஆண்டில், ஜிஎஸ்டி கவுன்சில், 2021 மற்றும் 2022 நிதி ஆண்டுகளில் கொரோனா ஆண்டுகளில் மாநிலங்களின் வருவாய் இழப்பை ஈடுசெய்ய எடுக்கப்பட்ட ரூ. 2.69 லட்சம் கோடி மதிப்புள்ள கடனின் வட்டி மற்றும் மூலதனத் தொகையை திருப்பிச் செலுத்த மார்ச் 2026 வரை வரிவிதிப்பை நீட்டிக்க முடிவு செய்தது.
இழப்பீடு செஸ் வரி விதிப்பு முறை முடிவடைய ஒரு ஆண்டுக்கும் குறைவான காலம் மட்டுமே உள்ள நிலையில், செப்டம்பர் 9 அன்று நடந்த 54-வது கூட்டத்தில் ஜிஎஸ்டி கவுன்சில், இழப்பீடு செஸ் வரியின் எதிர்கால போக்கை தீர்மானிக்க GoM அமைக்க முடிவு செய்தது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications