ஜிஎஸ்டி கவுன்சிலின் 49வது கூட்டம் டெல்லியில் பிப்ரவரி 18ம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறுகிறது.
இந்த மாத தொடக்கத்தில் பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின் ஜிஎஸ்டி கவுன்சிலின் 49 வது கூட்டம் நடைபெறுவதால் வர்த்தகத் துறையின் கவனம் மொத்தமாக இதில் திரும்பியுள்ளது.
இந்தப் பட்ஜெட் அறிக்கையில் மத்திய அரசு மாநிலங்களுக்கு 50 ஆண்டு வட்டியில்லாக் கடன் திட்டத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டும் முக்கியமான விஷயங்கள் என்ன..? மக்களின் எதிர்பார்ப்பு என்ன..? வாங்க பார்ப்போம்.
ஜிஎஸ்டி கவுன்சில்
இந்த ஜிஎஸ்டி கவுன்சிலின் 49வது கூட்டத்தில், பான் மசாலா மற்றும் குட்கா வணிகத்தில் வரி ஏய்ப்பைத் தடுக்க மேல்முறையீட்டுத் தீர்ப்பாயங்கள் மற்றும் வழிமுறைகள் அமைப்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இந்தத் தீர்ப்பாயத்தில் உறுப்பினர்களில் சமத்துவத்தை உறுதி செய்வதற்காக மத்திய அல்லது மாநிலங்களில் இருந்து ஒரு நீதித்துறை மற்றும் ஒரு தொழில்நுட்ப உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் எனத் தெரிகிறது.
ஆன்லைன் கேமிங்
மேலும் இந்தியா முழுவதும் எதிர்பார்த்து இருக்கும் ஆன்லைன் கேமிங் குறித்த அமைச்சர்கள் குழுவின் அறிக்கை மற்றும் ஜிஎஸ்டி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் அறிக்கை நாளை நடைபெறும் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.
சிமெண்ட்
சிமென்ட் மீதான ஜிஎஸ்டி வரியை தற்போதைய 28 சதவீதத்தில் இருந்து குறைக்க முடியுமா என்பதை ஆய்வு செய்வதில் மத்திய அரசு ஆர்வமாக உள்ளது. அதிகாரிகள் குழு இது குறித்து ஆய்வு செய்யும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த மாத தொடக்கத்தில் தெரிவித்தார். இந்த நிலையில் சிமெண்ட் குறித்த ஜிஎஸ்டி அறிவிப்பு வெளியாக 50:50 சான்ஸ் மட்டுமே.
48வது ஜிஎஸ்டி கூட்டம்
ஜிஎஸ்டி கவுன்சிலின் 48வது கூட்டம் டிசம்பர் 17, 2022 அன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. கடந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி கவுன்சில், ஆதாரங்களைச் சேதப்படுத்துவது உட்பட, மூன்று வகையான குற்றங்களை ரத்துச் செய்யப் பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.
உணவு பொருட்கள்
இந்தியாவில் பால், அரிசி, கோதுமை மாவு, பருப்பு மற்றும் தானியங்கள் என மக்கள் தினமும் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடந்த ஒரு மாதத்தில் 5-15% அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு காரணமாகச் சந்தையில் டிமாண்ட் குறைந்து வர்த்தகம் பாதிக்கத் தொடங்கும் என்று நிறுவனங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
வரி குறைப்பு..?!
பணவீக்க உயர்வால் மக்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு வரும் வேளையில், மக்களின் சுமையைக் குறைக்க மத்திய அரசு மக்காச்சோளம் போன்ற பொருட்களின் மீதான இறக்குமதி வரிகளைக் குறைக்க அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது எனச் சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இதனால் இதுக்குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.
பெட்ரோல், டீசல்
தற்போது மக்காச்சோளம் சுமார் 60% அடிப்படை வரியைப் பெற்று வருகிறது, அதே நேரத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரிகளும் மீண்டும் குறைக்க வேண்டும் என அதிகப்படியான கோரிக்கை வைக்கப்பட்டு வரும் வேளையில், எரிபொருளை ஜிஎஸ்டி கீழ் கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடக்க வாய்ப்பு உள்ளது.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications