இந்திய ஆட்டோமொபைல் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு முக்கியமான முடிவை ஜிஎஸ்டி கவுன்சில் இன்று எடுத்துள்ளது. இந்தியாவில் இனி பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட எலக்ட்ரிக் வாகனங்கள், பெட்ரோல் வாகனங்கள், டீசல் வாகனங்களின் விற்பனை மீதான ஜிஎஸ்டி வரி விகிதத்தை உயர்த்தியுள்ளது நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில்.
இந்தியாவில் செகண்ட் ஹேண்ட் வாகனங்களின் சந்தை மிகப்பெரியதாக இரு்ககும் வேளையில் மத்திய நிதியமைச்சர் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட கார்கள் உட்பட எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை மீதான வரி 12% -லிருந்து 18% ஆக உயர்த்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு ஆலோசனை வழங்கும் நிபுணர்கள் குழுவான 'ஃபிட்மென்ட் கமிட்டி', இந்த வாகனங்களுக்கான ஜிஎஸ்டி விகிதத்தை தற்போதைய 12% -லிருந்து 18% ஆக உயர்த்தும் பரிந்துரையை சமீபத்தில் செய்திருந்தது. இதை தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சல்மரில் நடைபெற்று வரும் 55வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த வரி உயர்வு பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலையை உயர்த்தி, அதன் விற்பனை குறைய வாய்ப்புள்ளது. தற்போது புதிய எலக்ட்ரிக் வாகனங்கள் 5% சலுகை விகிதத்தில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு பசுமை போக்குவரத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், பயன்படுத்தப்பட்ட எலக்ட்ரிக் வாகனங்களுக்கும் அதிக வரி விதிக்கப்பட்டால், வாங்குவோரின் விருப்பம் குறைந்து, எலக்ட்ரிக் வாகனங்களின் 2ஆம் கட்ட சுழற்சி பாதிக்கப்படும் என எதரிபார்க்கப்படுகிறது.
இந்த முடிவு ஆட்டோமொபைல் துறையில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மீதான வரி உயர்வு, செகண்ட் ஹேண்ட் வாகனங்களின் சந்தையை நேரடியாக பாதிக்கும். இதை நம்பி வர்த்தகம் செய்யும் பலரும் பாதிக்கப்படுவார்கள்.


Click it and Unblock the Notifications