ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் அக்டோபர் 7 ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில், இக்கூட்டத்தில் மக்கள் அருந்தும் மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் எக்ஸ்ட்ரா நியூட்ரல் ஆல்கஹால்-ஐ (ENA) ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு வெளியே வைக்க பரிந்துரை செய்துள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எக்ஸ்ட்ரா நியூட்ரல் ஆல்கஹால்-ஐ அல்லது ஈஎன்ஏ மீது வரி விதிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் இல்லை என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும் இதற்கு வரி விதிக்கும் அதிகாரம் ஜிஎஸ்டி கவுன்சிலின் மற்றும் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது என்றும் விளக்கினார். தற்போது டாஸ்மாக் கடைகளில் கிடைக்கும் மதுபானத்தின் முழு தூய்மையான வடிவமான ENA எனப்படும் எக்ஸ்ட்ரா நியூட்ரல் ஆல்கஹால். இது மதுபானங்களை தயாரிப்பதற்கான முதன்மை மூலப்பொருளாக விளங்குகிறது.

இருப்பினும், மத்திய-மாநில ஆரோக்கியமான உறவு மனதில் வைத்துக் கொண்டு, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எக்ஸ்ட்ரா நியூட்ரல் ஆல்கஹால் மீது வரி விதிக்கும் உரிமையை மாநிலங்களுக்கு விட்டுக்கொடுப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். இதன் மூலம் மாநில அரசுக்கு கூடுதலாக வரி விதிக்கும் உரிமை எக்ஸ்ட்ரா நியூட்ரல் ஆல்கஹால் மூலம் கிடைத்துள்ளது.
மேலும் ஜிஎஸ்டி வரி விதிப்பின் வரம்பில் இருந்து ENA ஐ விலக்குவதற்கு சட்டக் குழு பொருத்தமான சட்டத் திருத்தத்தை ஆராய துவங்க உள்ளது.
தொழில்துறை பயன்பாட்டிற்கான திருத்தப்பட்ட மதுபானத்திற்கு (Rectified Spirit) தனி HS குறியீடு உருவாக்கப்படும் என்றும் நிதி அமைச்சர் கூறினார்.
Rectified Spirit-க்கு தொடர்ந்து 18 சதவீத ஜிஎஸ்டி வரியை ஈர்க்கும். மேலும் புதிதாக உருவாக்கப்படும் HS குறியீட்டின் கீழ் தொழில்துறை பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் மதுபானத்திற்கு இணைக்கப்பட்டு ஜிஎஸ்டி விதிகள் திருத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications