இந்தியா முழுவதும் கொரோனாவின் தாக்கம் மிக மோசமான பாதிப்பினை ஏற்படுத்தி வருகின்றது. இதனால் ஆக்சிஜன் தொடர்பான மருத்துவ உபகரணங்கள், கொரோனா சம்பந்தபட்ட மருத்துவ பொருட்களுக்கு தேவை அதிகரித்து வருகின்றது.
இதனால் பல தரப்பிலும் இருந்தும் கொரோனா தொடர்பான மருந்து பொருட்கள், தடுப்பூசிகள், மருத்துவ உபகரணங்கள் என பல பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரியில் விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

தமிழகம் உள்பட பல்வேறு மாநில அரசுகளும் இதனையே வலியுறுத்தி வந்தன. எனினும் மத்திய அரசோ வரி விதிப்பினை ரத்து செய்வது மிகை வரியை செலுத்திய மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு இழப்பினை ஏற்படுத்தும் என்றும் கூறி வந்தது.
இந்த நிலையில் இன்று காலை முதல் நடந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. சுமார் ஏழு மாதங்களுக்கு பிறகு நடைபெறும் இந்த கூட்டத்திற்கும் பிறகு, ஏழு மாதங்களுக்கு பிறகு பத்திரிக்கையாளர்களையும் சந்தித்து வருகின்றார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இந்த நிலையில் பலரும் எதிர்பார்த்த நிலையில் கொரோனா தொடர்பான இறக்குமதி செய்யும் நிவாரண பொருட்களுக்கு வரி சலுகை அளிக்கப்படுவதாகவும். இது ஆகஸ்ட் 31 வரையில் அமலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்தான அறிக்கை விரைவில் சமர்பிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
அதோடு கொரோனா வைரஸினை தொடர்ந்து மக்களை பயமுறுத்தி வரும் கரும்பூஞ்சை வைரஸினை குணப்படுத்தக் கூடிய, மருந்தான ஆம்போடெரிசின் பி (amphotericin B )மருந்திற்கும் வரி சலுகை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் மருத்துவ உபகரணங்கள், மற்றும் மருந்துகள் விலை குறையும். இத நெருக்கடியான நேரத்தில் பாதிகப்பட்டுள்ள பல லட்சம் மக்களுக்கு உதவும்.
இது தவிர கொரோனா தடுப்பூசி உட்பட அனைத்து மருந்துகள் மீதான வரி குறைப்பது குறித்து ஆலோசித்து, ஜூலை 8ம் தேதி விரிவான அறிக்கை அளிக்கப்படவுள்ளதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் கூறியுள்ளார்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications